சந்தில் சிந்து பாடிய சனம்.. அய்யோ நீங்க எனக்காக பேசவே வேண்டாம்.. அசிங்கப்படுத்திய கேபி!
சென்னை: பிரச்சனை என்னவென்றே தெரியாமல் ஒத்து ஊதிய சனம் ஷெட்டியை அசிங்கப்படுத்தி விட்டார் கேபி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளாக நேற்றும் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் சோமிடம் இருந்து சொத்து பத்திரங்களை திருடினார் பாலாஜி. இதனை சோம் மற்றும் அவரது கண்டுபிடித்துவிட்டனர்.

டென்ஷனான பாலாஜி
அப்போது கேபி, பாலாஜியிடம் ஹானஸ்ட்டா சொல்லு நீதான வச்சுருக்க என்னார். அதனைக் கேட்ட பாலாஜி கூலாக கேபிக்கு பதிலை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் சுச்சியும் ஷிவானியும் ஏத்தி விட்டத்தில் டென்ஷனாகிவிட்டார் பாலாஜி.

யாரும் பேச வேண்டாம்
இதனால் கார்டன் ஏரியாவில் இருந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பாலாஜி, கேபியிடம் கத்தினார். தொடர்ந்து பொதுவாய் எல்லோரையும் போடா வாடா என திட்டி ஆக்ரோஷமாய் பேசினார். என் ஹானஸ்ட்டை பத்தி யாரும் இங்கு பேச வேண்டாம் என்றும் கூறினார்.

சந்தில் சிந்து பாடினார்
அப்போது இடையில் வந்த சனம் ஷெட்டி, பை மிஸ்டேக்கா கேபி வாயில் ஹானஸ்ட் என்ற வார்த்தை வந்திருக்கும், குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பிட்டு சொல்லியிருக்க மாட்டார் என கேபிக்கு ஆதரவாக பேசுவது போல், பேசினார்.

எனக்காக பேச வேண்டாம்
சனம் பேசியதை கேட்டு மிரண்டு போன கேபி, நான் மிஸ்டேக்காக எல்லாம் பேசவில்லை. நான் அப்படி சொல்லவே இல்லை. நீங்கள் எனக்காக பேச வேண்டாம் சனம். நானே எனக்காக பேசிக்கொள்கிறேன், நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என சனமை கிளப்பி விட்டார்.

மொக்கை வாங்கிய சனம்
என்ன பிரச்சனை என்றாலும், யாராவது ரெண்டு பேர் பேசினால் கூட என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சனம் ஷெட்டிக்கு ரொம்பவே அதிகம். இதனால் பல முறை பாலாஜி உட்பட பலரிடம் மொக்கை வாங்கியுள்ளார் சனம் .

அசிங்கப்பட்டுவிட்டார்
ஆனாலும் என்ன பிரச்சனை என்றாலும் மூக்கை நுழைப்பதை மட்டும் அவரால் விட முடியவில்லை. தன்னுடைய முந்திரிக்கொட்டை தனத்தால் தற்போது சின்னப்பெண்ணான கேபியிடமும் அசிங்கப்பட்டுவிட்டார் சனம் ஷெட்டி.


Click it and Unblock the Notifications











