பிக்பாஸை தொடர்ந்து கேபியை தட்டித் தூக்கிய விஜய் டிவி.. பிரபல நிகழ்ச்சியில் ஜட்ஜ்ஜானார்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சிக்காக கேபியை தட்டி தூக்கியுள்ளது விஜய் டிவி.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்தவர் கேபிரியல்லா.

இவர் விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அன்பு கேங்கில் ஐக்கியம்

அன்பு கேங்கில் ஐக்கியம்

இதில் நேர்மையாக விளையாடிய கேபி, சில வாரங்களுக்கு பிறகு அன்பு கேங்கில் ஐக்கியமானார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தாலும் நல்ல ஆதரவும் இருந்தது கேபிக்கு.

வெளியேறிய கேபி

வெளியேறிய கேபி

பினாலே வாரத்தில் இருந்த கேபி, 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 10 லட்சம் ரூபாயாக உயர்ந்த பிறகு தான் எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று எண்ணியிருந்தார் ரியோ. ஆனால் யாரும் எதிர்பாராமல் கேபி அந்த பணத்துடன் சென்றார்.

ஆரியின் படங்கள்

ஆரியின் படங்கள்

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேபிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரி நடித்த பல படங்கள் ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

ரம்யாவுக்கு சான்ஸ்

ரம்யாவுக்கு சான்ஸ்

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகும் ஆரி மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இதேபோல் ரம்யா பாண்டியனும் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நடுவராகும் கேபி

நடுவராகும் கேபி

ஆனால் கேபி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகியுள்ளார் கேபி. இதனை கேபியே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சந்திக்கலாம்..

மீண்டும் சந்திக்கலாம்..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள போஸ்ட்டில், என்னை மிஸ் செய்வதாக ஜெனியூனாக மெசேஜ் அனுப்பிய என்னுடைய அனைத்து சப்போட்டர்ஸ்களுக்கும், நானும் உங்களை மிஸ் செய்கிறேன். இனியும் அப்படி வேண்டாம், நாம் முரட்டு சிங்கிள்ஸ் மூலம் மீண்டும் சந்திக்கலாம். தொடர்ந்து ஆதரியுங்கள்.. லவ் டூ ஆல்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார் கேபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X