Just In
- 9 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 9 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 24.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரியதான் இவன் காலி பண்றான்.. பட்டென பாலாவின் பல்ஸை பிடித்த கேபி.. செம கெத்தும்மா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி நடந்துக் கொண்ட விதத்தை பார்த்த கேபி, பாலாஜியின் பிளானை பளீச்சென சொல்லிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கால் டாஸ்க்கின் போது ஆரிக்கு கால் செய்த பாலாஜி தன்னுடைய பக்க குறைகளை மட்டும் கூறினார்.
ஆரி, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல் இப்போது வரை நடந்த பிரச்சனைகளில் தனக்கு ஏற்பட்ட ஆதங்கம் என அவர் மீது உள்ள குறைகளையும் குற்றச்சாட்டுக்களையும் மட்டும் கூறினார்.
தங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா!

குறைகள் மட்டுமே வெளியானது
தனது குற்றச்சாட்டுக்களுக்கு ஆரியை பதில் என்ன என்பதை பாலாஜி கேட்கவே இல்லை. அவர் பதில் சொல்ல நேரம் தருகிறேன் என்று சொல்லி காலை துண்டித்துவிட்டார். இதனால் ஆரி மீதான குற்றச்சாட்டுக்கள் மட்டுமே வெளிப்பட்டது.

மட்டமான கேம்
எந்த சூழ்நிலையில் அவை நடந்தது, தான் சொன்னதெல்லாம் உண்மையா என்பதை கூட சொல்ல ஆரியை அனுமதிக்கவில்லை பாலாஜி. ஆரி இந்த தவறையெல்லாம் செய்தார் என்பதை மக்களுக்கு காட்டும் வகையில் இப்படி ஒரு மட்டமான கேமை விளையாடினார் பாலாஜி.

பாலாஜியால் அதிர்ச்சி
பாலாஜி ஆரியிடம் போனில் பேசியது கடந்த வாரத்தை போன்றே இந்த வாரமும் லிவிங் ஏரியாவில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பாலாஜியின் பிளானால் அதிர்ச்சியடைந்தனர்.

கேபி விளக்கம்
இந்நிலையில் கால் டாஸ்க் முடிந்து வெளியே வந்தனர் போட்டியாளர்கள். அப்போது, சோம் என்ன நடந்தது என்று கேபியிடம் கேட்டார். அதற்கு பதில் சொன்ன கேபி, ஆரியை பேச விடாமலேயே அவரது காலை கட் பண்ணிட்டார் என்றார்.

மாற்றி விட்டார்
தொடர்ந்து பேசிய கேபி, முதலில் எனக்கு கிளாரிட்டி வேண்டும் என்றுதான் பாலாஜி ஆரியுடன் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர் மீதான குறைகளை எல்லாம் சொல்லி என்னுடைய ஆதங்கம் என மாற்றிவிட்டார். கிளாரிட்டி வேண்டும் என்றால் ஆரியுடைய பதில்களையும் கேட்டிருக்க வேண்டும்.

ஆரிய காலி பண்றான்
யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன்னு சொல்லிட்டு மற்றவர்களை காலி பண்றீங்கன்னு ஆரியை சொன்னான் பாலாஜி. ஆனா பாலாஜிதான் ஆரியை காலி பண்றான் என்று பளீச்சென சோமிடம் கூறினார் கேபி.

புரிந்து கொண்ட கேபி
இதனை தொடர்ந்து கிட்சனில் ஆரியும் கேபியும் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கேபி ஆரியிடம், நீ ஓகேதானே என்று கேட்டார். அதற்கு சிரித்தப்படியே ஓகே என்று கூறினார் ஆரி. ஆக பாலாஜியின் பிளான் மற்றும் கேம் கேபிக்கு சரியாக புரிந்துவிட்டது.