பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கேபியின் அம்மா.. ஆரியை பார்த்து என்ன சொன்னாங்க பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கேபியின் அம்மாவும் ஆரியை புகழ்ந்திருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளது. இதனால் கடந்த சீசன்களை போல் ஃபிரீஸ் டாஸ்க்கை தொடங்கி போட்டியாளர்களின் குடும்பத்தினரை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அண்ணா, ரம்யாவின் குடும்பத்தினர், ரியோவின் மனைவி, சோமின் சகோதரர் என பலரும் வந்து சென்றுள்ளனர்.

ஸ்லிம் ஃபிட்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கேபியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது தெரியவந்துள்ளது. ஸ்லிம் ஃபிட்டாக சிக்கென இருக்கிறார் கேபியின் அம்மா.

கட்டியணைத்து கதறல்
வரும்போதே கண்ணீருடன் வரும் அம்மாவை பார்த்ததும் குடுகுடுவென ஓடி வருகிறார் கேபி. இருவரும் கார்டன் ஏரியாவில் கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றனர். தொடர்ந்து உள்ளே வரும் கேபியின் அம்மா, ஷிவானியின் கன்னத்தை தடவி க்யூட் என்கிறார்.

யூ டூ புருட்டோஸ்
சோமுக்கு ஹாய் சொல்லும் அவர், ஆரி அறிமுகப்படுத்துவதற்கு முன்பே உங்களை நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருக்கிறேன் என்று கூறு ஏதோ சொல்கிறார். கேபியின் அம்மாவும் ஆரியை புகழ்வதை பார்த்த கேபி, யூ டூ புருட்டோஸ் என்று செல்லமாக கடிந்து கொள்கிறார்.

சிலருக்கு கண்ணு தெரியாது
தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவில் தனது அம்மாவுடன் பேசுகிறார் கேபி. அப்போது டாஸ்க்கின் போது இன்டிவிட்ஜூவலாவும் விளையாடு என்கிறார். அதற்கு, பதில் சொல்லும் கேபி, இங்கு இருக்கும் சிலருக்கு கண்ணு தெரியாது. நான் நல்லா பண்ணாலும் அப்ரீசியேட் பண்ண மாட்டாங்க என்று கூறுகிறார்.

சண்டை போடணும்னு தேவையில்ல..
அதற்கு பதில் சொல்லும் கேபியின் அம்மா, அதை நீ எடுத்து வைக்கலாம் என்று கூறுகிறார். அதனைக் கேட்ட கேபி, அப்படி சண்டை போட்டுதான் வாங்கணும்னு இல்ல.. என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ.


Click it and Unblock the Notifications











