உங்கள நெடுஞ்சாலை படத்துல பார்த்திருக்கேன்.. வந்த வேகத்தில் ஆரி பக்கம் சாய்ந்த சுனிதா.. காண்டான கேபி!

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கேபியின் அம்மா, வந்த வேகத்தில் ஆரியை புகழ்ந்ததால் கடுப்பாகிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதுவரை ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அண்ணா, ரம்யாவின் குடும்பத்தினர், ரியோவின் மனைவி, சோமின் சகோதரர் என பலரும் வந்து சென்றுள்ளனர்.

கண்ணீர் விட்டப்படியே என்ட்ரி

கண்ணீர் விட்டப்படியே என்ட்ரி

இன்றைய எபிசோடில் கேபியின் அம்மா சுனிதா ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற நெஞ்சில் ஜில் ஜில் பாடல் ஒலிக்க ஸ்லீம் ஃபிட்டாக சிக்கென இருக்கும் கேபியின் அம்மா கண்ணீர்விட்டப்படியே உள்ளே வந்தார்.

3 நாளா மேக்கப் போடுகிறேன்

3 நாளா மேக்கப் போடுகிறேன்

கண்ணீருடன் வந்த அம்மாவை பார்த்ததும் குடுகுடுவென ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார் கேபி. இருவரும் கார்டன் ஏரியாவில் கட்டியணைத்து கண்ணீர் விட்டனர். அப்போது நீங்கள் வருவீங்க என்று 3 நாளா மேக்கப் போடுகிறேன் என்றார் கேபி.

நெடுஞ்சாலை படத்தில்..

நெடுஞ்சாலை படத்தில்..

மேலும் தனது அழாதே அம்மா, அழக்கூடாது என தனது அம்மாவுக்கு ஆறுதல் கூறினார் தொடர்ந்து உள்ளே சென்ற சுனிதா, ஷிவானியின் கன்னத்தை தடவி க்யூட் என்றார். சோமுக்கு ஹாய் சொன்ன அவர், ஆரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே உங்களை நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருக்கிறேன் என்றார்.

யூ டூ புருட்டோஸ்

யூ டூ புருட்டோஸ்

மற்ற ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினரை போன்று தனது அம்மாவும் ஆரி பக்கம் சாய்ந்ததை பார்த்த கேபி, யூ டூ புருட்டோஸ் என்று செல்லமாக கோபப்பட்டார். தொடர்ந்து தனது அம்மாவுடன் பாத்ரூம் ஏரியாவில், அமர்ந்து பேசினார் கேபி.

டவுட் வரக்கூடாது

டவுட் வரக்கூடாது

அப்போது நீ நன்றாக விளையாடுகிறாய். நாங்கள் எல்லோரும் உன்னால் பெருமை படுகிறோம். எங்க என்ன பேசணுமோ அங்க பேசிடுற.. குரூப் டாஸ்க்கா இருந்தாலும் இன்டிவிட்டஜுவலா ஃபோகஸ் பண்ணு. உனக்கு உன் மேல டவுட் வரக்கூடாது.

ஏத்துக்க மாட்டாங்க

ஏத்துக்க மாட்டாங்க

டாஸ்க் நல்லா பண்ற.. வேலையும் நல்ல பண்ற.. எப்போவும் உன் மேல உனக்கு டவுட் வரக்கூடாது என்று மகளுக்கு டிப்ஸ் கூறினார் சுனிதா. அதற்கு பதில் சொன்ன கேபி, இங்க சில பேருக்கு கண்ண மறைக்குது.. நான் என்ன பண்ணாலும் அதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க.. என்று கூறினார்.

எனக்கு அம்மா மாதிரி

எனக்கு அம்மா மாதிரி

அதற்கு பதில் கூறிய சுனிதா, நீ பொலைட்டா எடுத்து சொல்லணும் என்றார். ஆனால் அப்படி சண்டை போட்டு வாங்கணும் என்ற அவசியம் இல்லை என்றார் கேபி. தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸுடன் பேசிய சுனிதா. எனக்கு அம்மா மாதிரி நான் உடையும் பேதெல்லாம் சப்போர்ட் பண்ணுவா என்று தனது மகளைப் பற்றி கூறி கண்ணீர்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X