2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ரம்யாவுன் சேர்த்து வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிவிட்டார் கேபி.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனுக்கு சக போட்டியாளரான சோம சேகர் மீது சாஃப்ட் கார்னர் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் கொடுக்கப்பட்ட சாக்லேட்டை ரம்யா பாண்டியன், சோமுக்கு தான் கொடுத்தார். அதை சோம் சாப்பிடாமல் அப்படியே பத்திரப்படுத்தி தற்போது வரை வைத்துள்ளார்.

சாக்லேட்டை கேட்டு..
இதனை விஷயத்தை அறிந்து ரியோ, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் அவரை கேலி செய்தனர். அந்த சாக்லெட்டை பிரித்துக்கொடு நாங்கள் சாப்பிட வேண்டும் என்று கேட்டும் சோம் அதை கொடுக்காமல் மறுத்து வருகிறார்.

மாற்றம் செய்யலாம்
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரம்யாவுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டடது. அந்த பவரை பயன்படுத்தி கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்பவர்களில் மாற்றம் செய்யலாம் என கூறினார் பிக்பாஸ்.

தட்டிக்கெடுத்த பாலாஜி
அப்போது நிஷாவுக்கு பதில் கேப்டன் டாஸ்க்கில் சோமை மாற்றினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோமின் அந்த வாய்ப்பை தட்டிக் கெடுத்த பாலாஜி, சம்யுக்தாவை கேப்டனாக்கினார்.

நாமினேட் செய்யவில்லை
அதன் பிறகும் பலமுறை பெஸ்ட் பர்ஃபாமர் உட்பட என்ன வந்தாலும் சோம்க்கே ஆதரவாய் இருந்து வருகிறார். சோமை வொர்ஸ்ட் பர்ஃபார் உள்ளிட்ட எந்த நெகட்டிவ் ஸ்டாண்டுக்கும் ரம்யா நாமினேட் செய்ததாக தெரியவில்லை.

டார்லிங் டார்லிங்..
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் போது, சோம் மற்றும் ரம்யா கணவன் மனைவியாக இருந்தனர். அப்போது டார்லிங் டார்லிங் என அழைத்துக் கொண்டனர்.

ஃபீலிங்ஸ் இல்லையா
மொத்தத்தில் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் அன்பு உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரம்யாவை வைத்து சோமை கேபி, ரமேஷ், ரியோ ஆகியோர் ஓட்டு ஓட்டென ஓட்டி விட்டனர். அப்போது பேசிய கேபி, உனக்கு ரெண்டு வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா என்று கேட்டார்.

வச்சு செய்தனர்
அதற்கு பதில் சொன்ன, சோம் எனக்கு எப்போவுமே ஃபீலிங்ஸ் இல்லை என்றார். அதனைக் கேட்ட ஜித்தன் ரமேஷ், அப்போ சாக்லேட்டை பிரிச்சு கொடு என்றார். தொடர்ந்து இதேபோன்று அவர்களை கலாய்க்கின்றனர். கூடவே ரியோவும் சேர்ந்து சோமை வச்சு செய்து விட்டார்.
Recommended Video

பூப்போட்ட சட்டை போடு
மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பொம்மைக்கு சோம் செருப்பு போட்டு விட்டிருப்பதை கலாய்த்தார் ரமேஷ். அதையும் விடாத கேபி, ஓ அவங்களுக்கு போட்டு விட முடியலைன்னு போட்டியா இல்ல அவங்களா நினைச்சு போட்டியா என்றார். மேலும் பூப்போட்ட சட்டை போட்டு ட்ரை பண்ணு என்றும் கிண்டலடித்தார்.


Click it and Unblock the Notifications











