போச்சா எல்லாம் போச்சா.. தூக்குறதுக்கு வரல.. லவ் பண்ண மட்டும் கேபி வேணுமா? பறக்கும் மீம்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் புரமோக்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.
Recommended Video
கடைசியாக வந்த புரமோவில் கேபிக்கும் பாலாஜிக்கும் காதல் பூப்பது போல புரமோ போட்டு கதையையே மாற்றி விட்டார் பிக் பாஸ்.
இரண்டாவது புரமோவில் கேபியை தூக்குறதுக்கு பாலாஜி முன் வரவில்லை. ஆனால், அப்புறம் எப்படி இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது என மீம்களாக போட்டு பிக் பாஸை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

ஷிவானி எஸ்கேப்
நேற்றைய எபிசோடில் ஷிவானியும் பாலாஜி முருகதாஸையும் கோர்த்து விட்டு செல்லம்மா பாட்டுக்கு ஆட வைத்தார் பிக் பாஸ். ஆனால், ஷிவானி அளவுக்கு பாலாஜியால் சிறப்பாக ஆட முடியவில்லை. இந்நிலையில், ஷிவானி ஜெயிலுக்கு தள்ளப்பட்ட நிலையில், கேபியுடன் ரொமான்ஸ் செய்கிறார் பாலாஜி. இதை பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேளை ஷிவானி தப்பிச்சுட்டாரு என பெருமூச்சு விடுகின்றனர்.

போச்சா எல்லாம் போச்சா
ரவுடி பேபிக்கு ஜோடி போட்டு அந்த ஆட்டம் ஆடிய ஆஜீத்தை விட்டுப்புட்டு, இப்போ பாலாஜி பின்னாடி சுற்றி திரியும் கேபியை பார்த்த ரசிகர்கள், போச்சா எல்லாம் போச்சா என ஆர்.ஜே. பாலாஜியின் போட்டோவை போட்டு மீம் போட்டு சிதற விட்டு வருகின்றனர். ஆஜீத்தை ஏமாற்றிவிட்டாயே கேபி என்றும் ரசிகர்கள் திட்ட தொடங்கி உள்ளனர்.

என்னடா நடக்குது இங்க
வில்லு படத்தில், விஜய்யும் நயனும் ரொமான்ஸ் பண்ணும் போது, அதை பார்த்து வடிவேலு, என்னடா நடக்குது இங்க என கேட்கும் மீமை பாலாஜி முருகதாஸ், கேபிரியல்லாவின் காதல் காட்சிக்கு போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த லவ் ஸ்டோரி தான் இந்த சீசனோட காதல் கதையா? கன்றாவியா இருக்கே என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

எனக்கு வருத்தம் பா
சனம் ஷெட்டி, ஷிவானி என பாலாஜி முருகதாஸுக்கு இவங்களாம் ஜோடியாவாங்க என கணக்கு போட்ட பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு வழியா பிக் பாஸ் வச்ச ஒரே ஒரு ஒர்த்தே இல்லாத ட்விஸ்ட் இதுதான் என்றும், கேபியையும், பாலாஜியையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதை பார்க்க எனக்கு வருத்தம் பா என கேபி ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

தூக்கும் போது வரல
கேபியை காப்பாற்ற பிக் பாஸ் கூப்பிடும் போது வராத பாலாஜி முருகதாஸ், ஏழு கதை வயசாகி ரம்யா பாண்டியனை தூக்கி சுத்து ரியோவை தூக்குனாரு. ஆனால், கேபிக்கு ஆதரவாக முடியாத நிலையிலும், சுரேஷ் தாத்தா தான் தூக்கி அசத்துனாரு. இப்போ லவ் பண்ண மட்டும் கேபி கேட்குதோ என பாலாஜியை வெளுத்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











