பார்க்கவே சகிக்கல.. சுட்டிக் குழந்தைக்கு குடுமி போட்ட கேபி.. போக்கிரி வடிவேல் மாதிரி ஆகிட்டாரே!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இப்போ ஏகப்பட்ட குரூப்கள் உருவாகி விட்டன.

இரண்டு பேரு, மூன்று பேரு என ஏகப்பட்ட டீம்கள், தங்களுக்குள்ளேயே ஒவ்வொரு விஷயத்தை பண்ணிக் கொண்டு, சுற்றி திரிகின்றன.

பாலா, ஷிவானி, சம்யுக்தா கேங்கில் இருந்து பிரிந்த கேபி மற்றும் ஆஜீத், தனியா செய்யும் அலப்பறைகள் ரொம்பவே ரசிகர்களை சோதித்து வருகின்றன.

சுட்டிக் குழந்தைக்கு குடுமி

சுட்டிக் குழந்தைக்கு குடுமி

நேற்றைய பிக் பாஸ் எபிசோடு ரொம்பவே மொக்கையாக போய்க் கொண்டிருந்த நேரத்தில், அதை இன்னும் டேமேஜ் பண்ண கேபியும் ஆஜீத்தும் சேர்ந்து செய்த சுட்டிக் குழந்தை டாஸ்க் ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதித்தது. ஆஜீத்துக்கு குடுமி போட்டு அழகு பார்த்தார் கேபி.

போக்கிரி வடிவேலு

போக்கிரி வடிவேலு

ஜூனியர் பாபி சிம்ஹாவா இருந்த ஆஜீத்தை போக்கிரி பட வடிவேலு மாதிரி குடுமி போட்டு மாற்றி விட்டார். மேலும், இருவரும் மாற்றான் பட சூர்யா போல ரெட்டை கதிரே என இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர் போல ஜோடி போட்டு ஒவ்வொருவரிடமும் போய் காமெடி பண்ணுகிறேன் என்கிற பெயரில் நல்லாவே கடுப்பேற்றினார்கள்.

வயசுலயே ரிவர்ஸ்

வயசுலயே ரிவர்ஸ்

பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டரே ஏற்கனவே என்ன டாஸ்க் கொடுக்கிறதுன்னு தெரியாமல், குழம்பிப் போய், ஜிப்ரிஷ் மொழியில் பேசுங்க, ரிவர்ஸில் நடங்க என மொக்கைப் போட்டு கொண்டிருக்கிறார். அதில், ஓவர் மொக்கையாக, நாங்க வயசுலயே ரிவர்ஸ் போயிட்டோம் என இருவரும் குழந்தையாக மாறி நடிப்பதை எல்லாம் பார்ப்பது மணிக்கூண்டு டாஸ்க்கை விட கொடுமை.

ரவுடியா ஃபார்மாக

ரவுடியா ஃபார்மாக

ஆரியின் நல்ல அட்வைஸை எல்லாம் கேட்காமல், பாலாஜி முருகதாஸ் பாணியை கடைபிடித்து நடக்க வேண்டும் என்றும், குட்டி ரவுடியாக ஃபார்மாக வேண்டும் என்பதற்காக, கழுத்தில் கண்ட கண்ட செயினையும், பொறுக்கி பசங்க போடும் சட்டைகளையும் மாட்டிக் கொண்டு திரியும் ஆஜீத்தை, குழந்தையாக்கி அடக்கி விட்டார் கேபி.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
சித்து வேலை நடக்குது

சித்து வேலை நடக்குது

சூப்பர் சிங்கர் ஆஜீத்தை விஜய் டிவி ரசிகர்கள், சுட்டிக் குழந்தையாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகின்றனர். இளம் பருவத்தை அடைந்து விட்ட ஆஜீத்தை பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை காப்பாற்ற ஏகப்பட்ட சித்து வேலைகளையும் பிக் பாஸ் தனியாக ஒரு சைடில் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X