தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சூப்பரான நிவர் புயல் அடித்து வெளுக்கிறது.

புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என நினைத்தா பார்த்தேன் என பாலாஜி ஃபீல் பண்ணும் அளவுக்கு கேபி தனது தனித்துவத்தை செம கெத்தாக வெளிப்படுத்தி வருகிறார்.

சோமசேகர் போன் கட் பண்ண சொன்னதும் கேபி கட் பண்ணது மீண்டும் ஃபேவரிசத்தை கிளப்பி உள்ளது.

நிவர் புயலுக்கு போட்டியாக

நிவர் புயலுக்கு போட்டியாக

நிச்சயம் பிக் பாஸ் போட்டியாளர்களும் சென்னையை வெளுத்து எடுக்கும் நிவர் புயலை நன்றாகவே உணர்ந்து வருவார்கள். ஆனாலும், அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நிவருக்கு போட்டியாக இன்னொரு சண்டை புயலை போட்டு வருகின்றனர். திங்கட் கிழமை தொடங்கிய இந்த பிக் பாஸ் புயல் இன்னமும் கரையை கடக்கவில்லை. அனிதா உடனே இப்படி ஒரு நியூஸ் வாசித்தால் நல்லா இருக்கும்.

கேபிக்கு அர்த்தம்

கேபிக்கு அர்த்தம்

கன்ஃபெஷன் அறையில் இருந்து கேபிக்கு சோமசேகர் கால் பண்ணி பேசுகிறார். பாலா - அர்ச்சனா, சனம் - சம்யுக்தா போன் சண்டை மாதிரி இல்லாமல், இவர்களது உரையாடல் செம ஜாலியாகவே செல்கிறது. கேபியின் இரண்டு பல்லை காணும், அதனால் கேப் விழுந்ததால் தான் கேபி என செமயாக அர்த்தம் சொல்லி சோம் கலாய்த்தார்.

போனை வச்சிடுங்க

போனை வச்சிடுங்க

கேபி உடன் சிரித்துக் கொண்டே செம ஜாலியாக பேசிக் கொண்டு இருந்த சோமசேகர், போனை வச்சிடுங்க என்று சொன்னதும், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், முரண்டு பிடிக்காமல், கேபி போனை கட் பண்ணி வச்சிட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கும் பற்றிக் கொண்டு வந்து விட்டது.

தெரிஞ்சுதான் வச்சேன்

தெரிஞ்சுதான் வச்சேன்

போன் கால் முடிந்து கேபி வெளியே வந்ததும் அகம் டிவி வழியே எல்லா அட்டகாசங்களையும் பார்த்துக் கொண்டிருந்த சனம் ஷெட்டி, கட் பண்ணு சொன்ன உடனே கட் பண்ணிடுவியா, உன் கேம் ஆட மாட்டியா? என கேட்டார். அதற்கு தெரிஞ்சுதான் வச்சேன் என நறுக்கென பதில் சொல்லி சனம் ஷெட்டியின் மூக்கை உடைத்து விட்டார்.

இதுக்கு பேருதான் குரூபிசம்

இதுக்கு பேருதான் குரூபிசம்

நான் சொல்லல, கேபி அந்த டீம் போயிட்டான்னு, சனம் ஷெட்டியுடன் பாலா கலந்து பேசி, குரூபிசம் மற்றும் ஃபேவரிசம் பிரச்சனையை மெதுவாக கிளப்பி தனது கேமை ஆட ஆரம்பித்து விட்டார். பாலாவுக்கும் ஷிவானிக்கும் போன் கால் பேச சொல்லி இருந்தால், பாலா நிச்சயம் ஷிவானிக்காக விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், ஷிவானியும் பாலாவும் பேசியிருந்தால், ஷிவானி விட்டுக் கொடுத்திருப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X