Just In
- 35 min ago
ஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ!
- 52 min ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
- 1 hr ago
கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!
- 1 hr ago
மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
Don't Miss!
- Sports
அடுத்தடுத்த தொடர்கள்... டி20 உலக கோப்பைக்கு முன்னாடி நியூசிலாந்து டூர்.. தயாராக இந்திய அணி!
- Finance
முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..!
- News
முதலில் விஷ தாக்குதல்... இப்போது கைது... இறுகும் பிடி.. சிக்கலில் நவல்னி
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முரட்டு பாலா.. கேபியை இப்படி முட்டித் தள்ளிட்டாரே.. அனல் பறக்கும் அன்சீன் புரமோ!
சென்னை: பிக் பாஸ் அன்சீன் புரமோவில் கேபியை பாலா முட்டித் தள்ளிவிட்டு, அவர் விழுந்த போதும் கண்டுக்காமல் பாடியதை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இரண்டாவது புரமோவில் ஆரி ஷிவானியிடம் நடந்து கொண்டது வயலென்ஸ் என பாலாவின் ஆர்மியினர் சொன்ன நிலையில், இப்போ இது என்ன? என ஆரியின் ஆர்மியினர் கேட்டு வருகின்றனர்.
நேற்று கேபி பாலாவை நோஸ்கட் செய்ததற்கு பக்காவாக பழி வாங்கி விட்டார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
இசைப்புயலே! நாளை ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்.. காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!

அன்சீனிலும் பாலா
பாலாவையும் ஆரியையும் காட்டியே பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அன்சீனிலும் பாலாவை ஹைலைட் பண்ணி காட்டி உள்ளனர். ஆனால், இரண்டாவது புரமோவாக இதை போடாமல், ஆரிக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட சண்டையை ஹைலைட் பண்ணியது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்து வருகிறது.

பாலாவுக்கு நோஸ்கட்
அர்ச்சனா இருக்கும் போது, கேபி கிட்சன் டீமில் இருந்து எஸ்கேப் ஆகிறார் ஆரி என்றும், இப்போ கிச்சன் டீமில் கேபி கஷ்டப்படுகிறார் என்றும் ஆரி மாற்றி மாற்றி பேசுகிறார் என கேபியிடம் பாலா போட்டுக் கொடுத்த நிலையில், அதை ஏன் என் கிட்ட சொல்ற என பாலாவுக்கு முகத்துக்கு நேராக சரியான நோஸ் கட் கொடுத்திருந்தார் கேபி.

கீழே விழுந்த கேபி
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில் கேபி, ஷிவானி, பாலா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் அந்தாக்ஷரி கேம் ஆட ஓடி வந்து பஸரை அழுத்த முயற்சிக்கின்றனர். அப்போது திடீரென கேபி கீழே விழுந்து கிடக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. கேபிக்கு என்ன ஆச்சு என ஹவுஸ்மேட்கள் பதறுகின்றனர்.

பாட்டு பாடும் பாலா
ஆனால், தன்னால் தான் கேபி கீழே விழுந்தார் என்பதை கண்டு கொள்ளாமல், பஸரை அழுத்தி விட்டேன், நான் பாடுகிறேன் என கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பாட்டு பாடுகிறார் பாலா என பாலாஜி முருகதாஸ் மீது ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வயலென்ஸ்
இரண்டாவது புரமோவில் ஷிவானியை ஆரி அப்படி செய்யலாமா அது வயலென்ஸ் என புலம்பிய பாலா ஆர்மியினர், இப்போ இந்த அன்சீன் புரமோவை பார்த்து விட்டு, இது, கேம் எலி போல கேபி குறுக்கே வந்தால் இப்படித்தான் விழுவா என பாலா பண்ணது கேம் தான் என்றும் வயலென்ஸ் இல்லை என்று முட்டுக் கொடுத்து வருவதை ஆரி ஆர்மியினர் சுட்டிக் காட்டி உள்ளனர்.

அன்சீனில் ஏன்
பாலா செய்யும் குற்றத்தை மெயின் புரமோவில் போடாமல், விஜய் டிவி மறுபடி மறுபடி அவரை சேவ் செய்வதாகவும், ஆரியை இந்த ஷோவை விட்டு வெளியேற்ற பிக் பாஸ் டீம் திட்டமிட்டு வருவதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். பாலா செய்தது சரியா, ஆரி செய்தது சரியா என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தெரிந்து விடும்.

ஷிவானி விழுந்திருந்தா
இதுவே ஷிவானி விழுந்திருந்தால் பாலாஜி முருகதாஸ் இப்படித்தான் பாடிக் கொண்டிருந்து கேம் ஆடியிருப்பாரா? கேபி என்பதால் தான் கண்டு கொள்ளவில்லையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கேபிக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கும் போது, பாலா மட்டும் கண்டுகொள்ளாதது விவாதத்தை கிளப்பி உள்ளது.