பச்சையா தெரியுது.. அன்பு டீமில் இருந்து கேபியை பிரிக்க பிளான் போட்ட பாலா.. கடைசி வரை குரூப்பு தான்!
சென்னை: குரூபிசம் பண்ணக் கூடாது என்றும் ஃபேவரிடிசம் பண்ணக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், கேப்டன் பாலா டீம் பிரித்ததை சூழ்ச்சி எனக் கூறி கேபி கடுப்பானார்.
ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா என அன்பு கேங்கை சேர்ந்த மூன்று பேர் இதுவரை வெளியேறி உள்ளனர்.
ஆனாலும், சோம், ரியோவை விட்டு பிரியவே மாட்டேன் என கேபி அடம்பிடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை கிளப்பி வருகிறது.

பக்கா பிளான் பாலா
பாலாவையும் ஷிவானியையும் தனித் தனி டீமாக பிரிக்காமல், சோமசேகரையும் கேபியையும் தனித் தனி டீமாக பிரிக்க பக்காவாக பாலாஜி முருகதாஸ் போட்ட பிளான், கேபி சொல்வதை போலவே பச்சையாக தெரிகிறது. அன்பு கேங்கை உடைக்க வேண்டும் என்கிற முடிவோடு தான் பாலா விளையாடி வருகிறார்.

நடுநிலையில்லா கேப்டன்
இந்த வாரம் பாலா பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்தாலும், நடுநிலை என்பது கொஞ்சம் கூட அவர் பக்கம் இருப்பதாகவே தெரியவில்லை. வழக்கம் போல தனது டீமை காப்பாற்றும் கேமை தான் ஆடி வருகிறார். அதனால், ஒவ்வொரு முறையும் அன்பு கேங்குடன் சண்டை ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை.

பச்சையாத் தெரியுது
பாலா சொன்ன இன்னொரு டீம் கேப்டன் ஆஃபரை கேபி ஏற்கவில்லை. தனக்கு அது பிடிக்கவில்லை என ஓப்பனாக சொல்லி ஒதுங்கிக் கொண்டார். பின்னர், தனது குரூப் ஆட்களான ரியோ மற்றும் சோமிடம் இது பற்றி பேசும் போது, பச்சையாத் தெரியுது பாலா என்னை பிரிக்க பிளான் போடுகிறான் என்று குற்றம்சாட்டினார்.

என்ன கணக்கு
கேப்டன் பாலா இருக்கும் டீமில் ஆஜீத், ஷிவானி என அவருடைய ஆட்களும், அனிதா சம்பத், ஆரி என மொத்தம் 5 பேர் அந்த டீமில் உள்ளனர். அன்பு கேங்கான ரியோ, சோம், கேபியுடன் ரம்யா இணைந்துள்ளார். 5 பேர் கொண்ட ஒரு டீம் மற்றும் 4 பேர் கொண்ட ஒரு டீமுக்கு இடையே போட்டி போடுவது என்ன கணக்கு என்றே தெரியவில்லை.
Recommended Video

ஒரு நடுவர்
நான்கு பேர் கொண்ட இரண்டு டீம்களை பிரித்து ஆரி அல்லது அனிதாவை நடுவராக போட்டு இருந்தால் சமநிலையை விளையாட்டு அடைந்திருக்கும். அதிலும் சிக்கலை உருவாக்கி வைத்துள்ளனர். கேபி, ரியோ, சோம் பிரியவில்லை என்பதை போலவே பாலா, ஷிவானி மற்றும் ஆஜீத் டீமாக விளையாடுகின்றனர். கடைசி வரை குரூப் மாறாது போல!


Click it and Unblock the Notifications











