For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி! எரியுதா?

  |

  சென்னை: சுட்டிக் குழந்தை கேபி, பாலாவை படுகேவலமாக திட்டும் போது பற்றி எரிந்த பாலாவுக்கு, அர்ச்சனா, ஆரியை எதிர்த்து இவர் பேசும் போது எப்படி எரிந்திருக்கும்.

  கர்மா இஸ் பூமரங் தம்பி பயில்வான் என்பது போல, அர்ச்சனா குழந்தைன்னு சொன்னதும் பாலாவுக்கு பொத்துக்கிட்ட வந்த கோபம் போல, ஷிவானியிடம் கேபியை குழந்தைன்னு சொன்னதை தெரிந்து கொண்ட கேபி வச்சு விளாசிவிட்டார்.

  தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என்கிற கேமை தான் பிக் பாஸ் வீட்டில் பாலா ஆடி வருவது அவருக்கே ஆப்பாக முடிந்துள்ளது.

  என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை!

  பொங்க வைத்த போன் கால்

  பொங்க வைத்த போன் கால்

  கஸ்டமர் கேர் டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்த்த சண்டையை நல்லாவே பிக் பாஸ் மூட்டி விட்டுள்ளார். அதுவும் முதல் கால் பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் கொடுத்து, ஆட்டத்தை அதிர வைத்தார். பாலாவிடம் போன் பண்ணி பேசிய அர்ச்சனா, திட்டம் போட்டு, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் பாலாவை போட்டு மிதிக்க ஏவி விட்டார்.

  பாலாவை அடிக்க வேண்டும்

  பாலாவை அடிக்க வேண்டும்

  இந்த சீரியல் வில்லிகள் எல்லாம் தன்னை எதிர்த்து பேசும் நபரை மற்ற ஆண்களை தூண்டி விட்டு, சண்டை போட வைப்பது போல, பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கின் போதே, பாலாவை அடிச்சி தூக்கி, பேன்ட், ஜட்டியை கழட்ட சொல்லி பெரிய சண்டைக்கு பிளான் போட்டார். ஆனால், அர்ச்சனாவின் திட்டத்தை ரியோ முறியடித்தார். இப்பவும் பாலாவை காலி பண்ண ஆரி, சோம், கேபியை நல்லாவே தூண்டி விட்டுள்ளார்.

  எகிறிய சோம்

  எகிறிய சோம்

  என்ன பார்த்தா நடிக்கிறேன், டிராமா பண்ணுறேன்னு சொல்ற பாலா, முதல்ல நீ பேசுனது தப்புன்னு சொல்லு என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு MMA ஃபைட்டர் சோமசேகர் சூடாகி வந்ததும், அதிர்ந்து போன பயில்வான் பாலா, நான் அப்படி நினைச்சு சொல்லல, என ரொம்பவே பம்மி பேச ஆரம்பித்தார்.

  விட்டு விளாசிய கேபி

  விட்டு விளாசிய கேபி

  நான் உனக்கு என்னடா பண்ணேன், நான் அர்ச்சனா கேங்கில சேர்ந்துட்டேன்னு நீ எப்படி சொல்லலாம் என சுட்டிக் குழந்தை கேபி பாலா மூஞ்சிக்கு மேல விரல் நீட்டி பேசும் போது தான், மற்றவர்களை மதிக்காமல் பாலா எகிறியதற்கு சரியான பதிலடி கிடைத்தது.

  நான் உனக்கு குழந்தையா?

  நான் உனக்கு குழந்தையா?

  ஷிவானிகிட்ட நான் குழந்தை மாதிரின்னு நீ எப்படி டா சொல்லலாம் என கேபி கேப் விடாமல் அர்ச்சனா கொளுத்தி போட்டதால் பற்றிக் கொண்டு பாலாவிடம் வெடித்து சிதறினார். கேபி எதிர்த்து பேசியதும், அர்ச்சனா, சோமசேகர் மற்றும் ரியோ என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் பாலாவை ரவுண்டு கட்டி திட்டித் தீர்த்தனர்.

  சப்போர்ட் செய்யாத ஷிவானி

  சப்போர்ட் செய்யாத ஷிவானி

  ப்ளஷ் போடாமலே பயத்தால் ஷிவானி நாராயணன் கன்னம் எல்லாம் சிவந்து போய் விட்டது. பாலாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசவும் அவரால் முடியவில்லை. அந்த 10 சதவீதம் நம்பிக்கை இல்லை என பாலா வாயை அர்ச்சனா பிடுங்கியது ஷிவானியை நல்லாவே உள்ளுக்குள் உறுத்த ஆரம்பித்து விட்டது.

  நீயெல்லாம் ஒரு ஆளு

  நீயெல்லாம் ஒரு ஆளு

  நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை பேச வந்துட்டான். நீயெல்லாம் ஒரு ஆளு என பயில்வான் பாலாவை மொத்தமாக பஞ்சர் பண்ணி அனுப்பி விட்டார் கேபி. ஆஜீத்தை நடுவில் இழுத்து விட்டு, கமல் சார் முன்னாடி என்னம்மா நடிக்கிற, நீ மத்தவங்க டிராமா பண்றாங்கன்னு பேச வந்துட்ட என விளாசி விட்டார்.

  English summary
  After Balaji Murugadoss and Archana phone conversation reveals many more issues arroun Bala. Gabriella put a strong quarrel fight against Balaji Murugadoss!
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X