மனுஷனா நீ.. உனக்கு கவலையே இல்லல்ல.. பாலாஜியை சரமாரியாக விளாசிய கேபி டார்லிங்!
சென்னை: தான் கோபமாக இருப்பதைக் கூட புரிந்துக் கொள்ளாத பாலாஜி முருகதாஸை மனுஷனா நீ என கேட்டு விளாசி விட்டார் கேப்ரியலா.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கேப்டன் டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் கேப்ரியலாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே ஆதரவு தெரிவித்தார்.
அவரது நெருங்கிய நண்பர்களான ஆஜித்தும் பாலாஜியும் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆதரவு தெரிவிக்கவில்லை
ஆனால் பாலாஜி, ரியோவை தூக்கி சுமந்து கேப்டனாக்கினார். இதனால் கடுப்பான கேப்ரியலா, எனக்கு நீங்கள் இருவரும் சப்போர்ட் செய்வீர்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் இருவருமே எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டார்.

நீங்கள் எப்படி சொல்லலாம்
அதற்கு பதிலளித்த பாலாஜி, உனக்கு அது தேவையில்லை என்று நினைத்தேன். நீ முன்பே சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார் பாலாஜி. அதற்கு நீங்கள் எப்படி என்னை டிசைட் பண்ணலாம், எனக்கு அந்த கெப்பாசிட்டி இல்லை என நீங்கள் எப்படி கூறலாம் என்றும் வச்சு வாங்கினார் கேபி.

என்ன செய்கிறாய்
தொடர்ந்து பாலாஜி மீது கோபத்தில் இருந்த கேபி, அவருடன் பேசாமல் இருந்தார். அப்போது கிட்சனில் பாத்திரம் கழுவி கொண்டிருந்த கேபியை பார்த்த பாலாஜி, எல்லோரும் சாப்டாச்சே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என உரிமையோடு கேட்டார்.

உனக்கு புரியவில்லை
அருகில் இருந்த ஆரியிடம், கேப்டன் டாஸ்க்கில் சப்போர்ட் பண்ணலன்னு பேசாமல் இருக்கிறாள் என கேபி குறித்து பேசினார். சோம், சம்யுக்தா கூறிய பிறகுதான் இவள் கோபமாக இருக்கிறாள் என்று எனக்கு தெரிந்தது என்றார் பாலாஜி. அதற்கு பதிலளித்த கேபி, அவர்களுக்கெல்லாம் தெரியுது உனக்கு தெரியவில்லை என உரிமையோடு கோபத்தை வெளிப்படுத்தினார்.

மனுஷனா நீ
தொடர்ந்து பேசிய கேபி, இவ்ளோ நேரம் நான் பேசாம இருக்கேன் உனக்கு கவலையே இல்லல்ல.. மனுஷனா நீ என கேட்டு பாலாஜிய ஏறு ஏறு என ஏறி விட்டார். தொடர்ந்து பேசிய பாலாஜி, ஆஜித்துடன் சேர்ந்து மனசுல உள்ளது கண்டுபிடிக்க நாம என்ன ஜோசியக்காரங்களா என்றார்.

ரியோ மீது அதிருப்தி
நான் எதையும் மனசுக்குள் வைத்துக்கொள்ள மாட்டேன், யாரா இருந்தாலும் மூஞ்சுக்கு நேராய் சொல்லிவிடுவேன் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய கேப்ரியலா ரியோ எல்லாத்தையும் செய்துவிட்டு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பாலாஜியும் வருத்தம்
கேப்ரியலா தன்னால் கேப்டன் ஆக முடியவில்லை என்று வருத்தப்பட்டதை பார்த்த பாலாஜி, ஏன் ரியோவுக்கு சப்போர்ட் செய்தோம் என வருத்தப்படுகிறேன். நான் தான் அவருக்கு சப்போர்ட் செய்துவிட்டேன் என ரொம்பவே வருத்தப்பட்டார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











