குழந்தை பெற்ற 11 நாளில் அதிசயம்: கார்த்தி பட நடிகையால் மட்டும் எப்படி முடிந்தது?
சென்னை: குழந்தை பெற்ற 11 நாளில் நடிகை கேப்ரியலா டிமிட்ரியாடஸ் செய்துள்ள காரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடிகை கேப்ரியலா டிமிட்ரியாடஸ் மும்பையில் தங்கி இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்தியின் தோழா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
அவர் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலை காதலித்து வருகிறார்.

அரிக்
அர்ஜுன் ராம்பலுடன் லிவ் இன் முறைப்படி வாழும் கேப்ரியலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அரிக் ராம்பல் என்று பெயர் வைத்துள்ளனர். அர்ஜுன் ராம்பல் தனது மனைவியும், மாடலுமான மெஹர் ஜெசியாவை பிரிந்த பிறகு கேப்ரியலாவுடன் உள்ளார். மெஹர் மூலம் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதிசயம்
பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தை கேப்ரியலா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பமாகி 9வது மாதத்தில் தனது உடல் எடை 21 கிலோ அதிகரித்ததாக அவர் கூறியுள்ளார். கர்ப்பமாக இருந்தபோதும் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ததுடன் யோகாவும் செய்தார். விரும்பியதை சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குழந்தை
குழந்தை பெற்றது குறித்து கேப்ரியலா கூறியதாவது, சுகப் பிரசவம் ஆனதில் மகிழ்ச்சி. ஒரு உயிரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது அருமையான அனுபவம். 21 கிலோ வெயிட் போட்டாலும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கு என் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தான் முக்கியம். நான் மறுபடியும் ஸ்லிம்மாக முயற்சி செய்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

ஸ்லிம்
பிரசவம் நடந்து 11 நாட்கள் கழித்து எடுத்த புகைப்படத்தை கேப்ரியலா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்ப்பவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் வயிறு ஒட்டிப் போய் ஒல்லியாகிவிட்டார். எப்படிமா இது சாத்தியமானது என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











