ஓவர் ஃபீலிங்கில் கேபி.. பாலாவுக்கு நிறைய ட்ரை பண்ணேன்.. அப்புறம் பிரிஞ்சிட்டேன்.. அன்சீன் புரமோ!
சென்னை: பிக் பாஸ் அன்சீன் புரமோவில் என்ன டாஸ்க் என்றே புரியாமல் ரசிகர்கள் குழம்பி தவிக்க, பாலாவுக்கு நிறைய ட்ரை பண்ணேன் என கேபி சொல்வதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் குழம்பி தவித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் பாலா பின்னாடி சுத்தி வந்த கேபி, பின்னர் அன்பு கேங்கில் ஐக்கியமானார்.
பாலா கேபியை தங்கை என்று கூப்பிட்டது தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டே பாலாவை விட்டு கேபி விலகியது குறிப்பிடத்தக்கது.

பாலாவுக்கு ட்ரை பண்ணேன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் போட்டியாளர்களுக்கு ஏற்றவாறு ஈஸியான டாஸ்க்குகளாக கொடுத்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அன்சீனில், பாலாவுக்கு ரொம்ப ட்ரை பண்ணேன் என கேபி சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

லவ் பிஜிஎம்
ஆரம்பத்தில் கேபிக்கும் பாலாவுக்கும் கனெக்ஷன் கொடுக்கும் விதமாக லவ் பிஜிஎம் எல்லாம் போட்டு பிக் பாஸ் எடிட்டர் தனது வித்தையை காட்டி இருந்தார். இந்நிலையில், பாலாவுக்கு ட்ரை பண்ணேன், ஷிவானி கூடவும் நட்பாக இருக்க நினைத்தேன். ஆனால், இருவரையும் விட்டு பின்னர் பிரிந்து விட்டேன் என்று மனம் விட்டு பேசுகிறார்.

தங்கச்சின்னு சொன்ன பாலா
ஆரம்பத்தில் பாலாவுக்கு ரூட்டு விட்ட கேபி, பின்னர் ஷிவானி பாலாவுடன் நெருக்கமாக பழகியதும் அவரை விட்டு விலகி அன்பு கேங்கில் சேர்ந்து கொண்டார். ஆஜீத்துடன் நட்பாக இருந்த கேபியை பாலா தங்கச்சின்னு கூப்பிட்டது பிடிக்கவில்லை என பாலாவை கேபி கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அந்த காண்டு
பாலாவை விட்டு பிரிந்த நிலையில், தான் பாலாவுக்கு எதிரான கருத்துக்களை மூஞ்சியில் அறைந்தார் போல தொடர்ந்து கேபி எடுத்து வைத்து வந்தார். அந்த காண்டு தான் பாலாவுக்கு எதிராக கேபியை மாற்றியது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சோமுடன் நெருக்கம்
பாலாவை விட்டு பிரிந்து போன கேபி, அன்பு கேங்கில் ஏற்கனவே ஐக்கியமாக இருந்த சோமசேகர் மற்றும் ரியோவுடன் நட்பாக நெருங்கி பழகி விளையாடி வருகிறார். ஆஜீத் இருந்த வரையிலும் ஆஜீத்துடன் கேபி நட்பாக பழகி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் ரியோவும் சோமும் கேபியை கட்டிப்பிடிப்பதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.


Click it and Unblock the Notifications











