சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்!

சென்னை: கிராண்ட் ஃபினாலே வாரத்தில் அதிரடி திருப்பமாக 5 லட்சம் பணப்பெட்டியுடன் எஸ்கேப்பான கேபி சனிக்கிழமை எபிசோடில் சேலை கட்டி வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, நிறைய நியூ நார்மல் விதிகளுடன் இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோமசேகர் என 5 போட்டியாளர்களில் ஒருவர் இன்று டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளார்.

கிராண்ட் ஃபினாலே

கிராண்ட் ஃபினாலே

கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, நிறைய நியூ நார்மல் விதிகளுடன் இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. நேற்றைய எபிசோடில் சோர்ந்து போயுள்ள பிக் பாஸ் ஃபைனலிஸ்ட்களை தேற்றும் விதமாக கமல் பேசினார். ரியோவுக்கு அதிகளவில் உற்சாகமூட்டினார்.

இறுதி ரீயூனியன்

இறுதி ரீயூனியன்

இறுதிப் போட்டியாளர்களாக தேர்வான 5 பேரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டீர்களா என கமல் கேட்டதும் ரம்யா, பாலா, ரியோ மற்றும் சோமசேகர் ஆரியுடன் மட்டும் தான் பிரச்சனை இருந்தது. அதையும் பேசி சரி செய்து கொண்டோம் என்று கூறினார்கள்.

சேலையில் கேபி

சேலையில் கேபி

கேபிரியல்லா.. என அழைத்த கமல் சட்டென சேலையில் அவர் வந்ததும், கேபி வரலையா என ஷாக் ஆகி கேட்டார். பின்னர், சேலையில் அழகா இருக்கீங்க என பாராட்டினார். கேபியை சேலையில் பார்த்த இறுதிப் போட்டியாளர்களும் ரொம்பவே ஆச்சர்யமாக பார்த்தனர். சோம் கேபியோட அம்மாவான்னு கலாய்த்தார்.

ஸ்மார்ட் மூவ்

ஸ்மார்ட் மூவ்

கேபியை பார்த்து பேசிய கமல் நீங்க பெட்டியை எடுத்தது பலருக்கும் ஷாக்கிங்காகவே இருந்தது. ஆனால், வெளியே எல்லாரும் ஸ்மார்ட் மூவ் என பாராட்டினார்கள் எனது கருத்தும் அது தான் எனக் கமல் கேபியை வெகுவாக பாராட்டினார். பின்னர், திடீர்னு பெட்டியை எடுக்கணும்னு ஏன் நினைச்சீங்க எனக் கேட்டார்.

பெட்டியை ஏன் எடுத்தேன்

பெட்டியை ஏன் எடுத்தேன்

போன வாரமே பெட்டி வரும்னு சொன்னாங்க, வந்திருந்தா கண்டிப்பா எடுத்திருக்க மாட்டேன். இறுதி வாரத்துக்கு வந்துட்டோம், திடீர்னு பணப்பெட்டி வந்த உடனே உள் மனசுல எடுத்துடு கேபின்னு சொல்லுச்சு, அதான் எடுத்தேன். அதை ஏன் எடுத்தேன்னு எனக்கே தெரியல.. குடும்பத்துக்கு எதையாவது செய்யணும்னு தோணுச்சு அதான் எடுத்துக் கொண்டேன் என கமலிடம் விளக்கினார்.

கேஷ் ப்ரைஸ்

கேஷ் ப்ரைஸ்

இறுதிக் கோட்டை தொடவதே ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேனின் கடமை. ஆனால், அதை விட்டு விட்டு நீங்க பணப்பெட்டியை எடுத்துக்கிட்டீங்க, அதுவும் இந்த ஷோவை பொறுத்தவரை ஸ்மார்ட் மூவ் தான். ஏன்னா ஒரு போட்டியாளருக்கு மட்டுமே டைட்டில் வின்னர் பட்டமும் கேஷ் ப்ரைஸும் கிடைக்கும் அதற்கடுத்து பெட்டியை எடுப்பவருக்கே பணப்பரிசு கிடைக்கும் என்பதால், உங்கள் முடிவு சரியான ஒன்று தான். எதிர்காலத்திலும் அந்த நேரத்திற்கு தகுந்தவாறு ஸ்மார்ட் மூவ் எடுக்க வாழ்த்துக்கள் என வாழ்த்தினார் கேபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X