ஆஜீத்தின் அந்த இடத்தில் கை வைத்த கேபி.. என்னடா புதுக் கதை ஆரம்பிக்கிறீங்க போல.. எல்லாம் அதுக்கா?
சென்னை: ஆஜீத்துக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைச்சதும் கிடைச்சது. அந்த பையனோட தூக்கமே கெட்டுப் போச்சு.
Recommended Video
பனியனுக்குள்ள, ஜட்டிக்குள்ள என அந்த அலாவுதீன் பூதத்தை ஒளித்து வைத்து ஒளித்து வைத்து காப்பாற்றி வருகிறார்.
இதுவரை சைலன்ட்டாக இருந்து வந்த கேப்ரில்லா, இப்போ ஆஜீத்தை சீண்டும் விதமாக செயல்பட ஆரம்பித்துள்ளார். எல்லாம் அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மொட்டைக்கும் ஆஜீத்துக்கும் முட்டிக்கிச்சு
செவ்வாய்க்கிழமை எபிசோடில், பாத்திரம் அடுக்கி வைக்க சொன்ன பஞ்சாயத்தில் மொட்டை தல சுரேஷுக்கும் ஆஜீத்துக்கும் முட்டிக்கிச்சு. அப்புறம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் ரூமில் கடைசியாக ஆஜீத் ஒரு வீக்கான போட்டியாளர் என ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜீத்துக்கு நேரடியாக சொன்னதில் இருந்தே இருவருக்கும் ஆகுறதில்லை.

வேட்டு வைத்த ஆஜீத்
இதனை மனதில் வைத்துக் கொண்டு, எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் சுற்றில் ரம்யா பாண்டியன் பேச்சைக் கேட்டு, மொட்டை தல சுரேஷின் ராஜ தந்திர கேமை நொறுக்கி அவரை ஆஜீத் வெளியேற்றினார். பின்னர், ரம்யா பாண்டியனின் பரந்த மனசு காரணமாக ஆஜீத்துக்கு ஈசியா அந்த ஃப்ரீ பாஸ் கிடைச்சது.

தலைவலி தரும் ஃப்ரீ பாஸ்
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் எனும் அந்த அலாவுதீன் பூதம் புதிய தலைவலியையும் ஆஜீத்துக்கு கொடுத்துள்ளது. அதனை பத்திரப்படுத்தி வைக்கவில்லை என்றால், மற்ற போட்டியாளர்கள் அதனை ஆட்டையை போட்டுடுவாங்கன்னு ரொம்பவே பயந்து பயந்து தூக்கத்தை கூட தொலைத்து விட்டார் ஆஜீத்.

பேன்ட்டுக்கு உள்ள
எவிக்ஷன் ஃப்ரீ பாஸை வாங்கிய உடனே பனியனுக்குள் ஒளித்து வைத்த ஆஜீத், அதன் பிறகு, பேன்ட்டு, ஜட்டிக்குள் என ஏகப்பட்ட இடங்களில் ஒளிய வைத்தும் தனது பெட்டிக்குள் ஒளித்து வைத்தும் அதனை கப்பாற்றி வருகிறார். சக போட்டியாளர்கள் ஆஜீத்திடம் எங்கே ஒளித்து வைத்திருக்க என கேட்டு அவனிடம் இருந்து அதனை பிடுங்க பார்த்து வருகின்றனர்.

அந்த இடத்தில் கை வைத்த கேபி
ஆஜீத்திடம் பாத்ரூம் ஏரியாவில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் எங்கே வச்சிருக்க தெரியும் என ஓவராக வழிந்து விளையாட ஆரம்பித்துள்ளார் கேபிரியல்லா. மேலும், சட்டென ஆஜீத்தின் இடுப்பு பகுதியில் கை வைத்து, இங்கே தான வச்சிருக்க என வேற லெவலில் சீண்டி விளையாடுவதை பார்த்த ரசிகர்கள், ஆரம்பிச்சுட்டாங்கய்யா என புலம்பி வருகின்றனர்.

காதல் பூக்குமா
ஏற்கனவே ஒரு எபிசோடில் ஆஜீத்தை கேபி அண்ணா என அழைத்தாரா? டா போட்டு அழைத்தாரா என்கிற பஞ்சாயத்து ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படி ஒரு சீன் வைத்து, ஆஜீத்துக்கும் கேபிக்கும் கனெக்ஷன் கொடுக்க பார்க்கிறார் பிக் பாஸ் என்றும் சீக்கிரமே பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு லவ் ஸ்டோரி மலரும் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

சோப்பு மாதிரி
கேபி ஆஜீத்தை அந்த இடம் வரை டச் பண்ணி எவிக்ஷன் ஃப்ரீ பாஸை எடுக்க முயன்ற நிலையில், அடுத்ததாக அனிதா சம்பத், நீ எங்க வச்சிருக்கன்னு சொல்லு என டார்ச்சர் பண்ணுகிறார். குளிக்கும் போது நீ டிரெஸ் கழட்டுவல அப்ப எடுத்துப்பேன் என்கிறார். அதற்கு நான் பாத்ரூமுக்கு உள்ளேயே எடுத்துட்டு போயிடுவேன், சோப்புக்கு பதிலா அதையே தேச்சி குளிப்பேன். 10 வாரத்துக்கு நானே வச்சிப்பேன் என்றார். பார்க்கலாம் பிக்பாஸோட ஆட்டத்தை!


Click it and Unblock the Notifications