பரிதவிக்கும் டெல்டா மக்களுக்கு விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்கிறார்.
கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவர்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளிப்பதுடன் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விக்ரம் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் இன்று ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கிறார்.
மன்றம் இல்லை, அரசியல் ஆசை இல்லை இருப்பினும் வாடி நிற்கும் மக்களுக்காக தானாக வந்து உதவும் விக்ரமின் நல்ல மனதை அவரின் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
திரையுலகினர் சார்பில் வழங்கப்பட்டதிலேயே அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ. 1 கோடியே 1 லட்சம் நிதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











