நம்ப வச்சு படுகுழியில் தள்ளிட்டாங்க.. சாவதை தவிர வேறு வழியில்ல.. கஜானா தயாரிப்பாளர் வேதனை!

சென்னை: இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கி, தயாரித்த திரைப்படம் கஜானா. இப்படத்தில், இனிகோ பிரபாகர், வேதிகா,யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபதீஸ் சாம்ஸ், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என பேசி உள்ளார்.

இதில, நான் கஜானா என்கிற திரைப்படத்தை இயக்கி, தயாரித்தேன் அப்படத்தின் இந்தி உரிமையை ஆட் வாய்ஸ் மீடியா உரிமையாளர் ஆதித்யா பாட்டியா வாங்கிக்கொள்வார்கள் என்றும் அதன் சௌத் இந்திய உரிமையை படம் வெளியாகும் போது வாங்கிக்கொள்வார்கள் எனக்கு ஆசை வார்த்தைகளை கூறினார்கள். இதனால், நான் ஏற்கனவே பிரபலம் நிறுவனத்திடம் போட்டு இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். இதனால், அவர்கள் என்னிடம் செட்டில்மென்டாக 85 லட்சம் ரூபாயை கெட்டார்கள், அவர்கள் ஒப்பந்தம் போடும் போது என்னிடம் வெறும் ரூ.35 லட்சத்தைத்தான் கொடுத்தார்கள். ஆனால், நான் அவர்களுக்கு ரூ 50 லட்சத்தை அதிகமாக கொடுக்க வேண்டியதாகவிட்டது. இதற்கு மீடியேட்டாக இருந்தவர் பரமசிவம். இந்த பரமசிவம் யார் என்றால், அண்மையில் வெளியான கேப்டன் விஜயகாந்தின் மகன் நடித்த படை தலைவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர். என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை வைத்துத்து தான் அவர், படை தலைவன் படத்தையே எடுத்துள்ளார்.

Gajaana yogi babu Prabadish Samz
Photo Credit:

ஏமாத்திட்டாங்க: இது எனக்கு தெரிந்து தான் நடந்தது, தயாரிப்பாளர் சங்கத்தில் தான் இந்த பஞ்சாயத்து நடந்தது. வேறு ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து பெரிய தொகை வருகிறதே என்று நினைத்துத்தான். நான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். ஆனால், ஆட் வாய்ஸ் மீடியா பாதி பணத்தை மட்டும் கொடுத்து மீதி பணமான ஒன்னே முக்கால் கோடி பணத்தை தரவே இல்லை. படத்தில் சிஜியில் சில மாற்றம் செய்ய வேண்டி இருந்ததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், கொடுத்தப்பணத்தையும் திருப்பி கேட்டு கடந்த 7 மாதமாக என்னை பல வகையில் சித்ரவதை செய்தார்கள். எனக்கு தெரியாமல் படத்தை சென்சாருக்கு அனுப்பி அவர்களின் பெயரில் சென்சார் வாங்கிக்கொண்டார்கள்.

குடும்பத்தை காப்பாத்துங்க: என்னை நம்பவைத்து ஏமாற்றி பெரிய படுகுழியில் என்னை தள்ளிவிட்டு, என் படத்தை பெரும் தொகைக்கு ஜியோஹாட் ஸ்டாருக்கு ஓடிடி உரிமையும், சாட்டிலைட் உரிமையை கலர் பிளஸ், ஸ்டார் பிளஸ் கோல்ட் என அனைத்திற்கும் விற்று விட்டார்கள். எனக்கு தரவேண்டிய ஒன்னே முக்கால் கோடியை இதுவரை தரவே, இல்லை, என் ஃபோனையும் எடுப்பதில்லை. இந்த படத்தால் நான் பத்து கோடி ரூபாயை இழந்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அண்ணன் சீமான் அனைவரும் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்யுங்கள். என் குடும்பம் இப்போது பெரும் கஷ்டத்தில் இருக்கிறது. என் உடலில் உயிர் இருக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தரவேண்டும் இல்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கஜானா படத்தின் தயாரிப்பாளர் கதறி அழுது பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: yogi babu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X