சம்மர் ஸ்பெஷல்.. மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

சென்னை: மே 1ந் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும், சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், சசிக்குமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு பெரிதாக ப்ரோமோஷன் எதுவும் இல்லாத போதும், இந்த படம் சத்தமே இல்லாமல் வசூலை அள்ளி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மே 9ந் தேதி என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

கஜானா: மே 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் திரைப்படம் கஜானா. இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கி இருக்கும் இப்படத்தில், இனிகோ பிரபாகர், வேதிகா,யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா, யோகி பாபு நடித்த இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் ஏன் வரவில்லை, பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா... இது கேவலமான வேலை, நீ எல்லாம் ஒரு நடிகனா என பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துக்கும், 'கஜானா' படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று 'கஜானா' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபதீஸ் சாம்ஸ் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் தான் கஜானா படம் வெளியாக இருக்கிறது.

theatre release movies Gajaana

நிழற்குடை: நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிழற்குடை திரைப்படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, அஹானா, தர்ஷன் சிவா என பலர் நடித்துள்ளனர். ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் மேன்மையைக் குறித்துப் பேசும் படமாக உருவாகி உள்ள இந்த படம் மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதன் இசைவெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். நிழற்குடை அழகான கருத்துள்ள படம், இன்றைய இளம் பெற்றோர்களுக்கு தேவையான விஷயம் இந்த படத்தில் இருக்கிறது என்றார்.

வாத்தியார் குப்பம்: ரஹ்மத் ஷாகிஃப் இயக்கி இருக்கும் இப்படத்தில், ரஷ்மிதா ஹிவாரி, காலித், அந்தோணி தாஸ், சாம்ஸ், கஞ்சா கருப்பு, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாத்தியார் குப்பத்தில் வட இந்திய நிறுவனம் ஒரு கம்பேனியை திறக்க உள்ளது. அதனை எதிர்த்து, கதாநாயகன் காலித் மற்றும் அந்தோணி தாசனுடன் சேர்ந்து களத்தில் இறங்கி வாத்தியார் குப்பத்தை காப்பாற்றுவது தன் படத்தின் கதை.

என் காதலே: பரியேறும் பெருமாள், கபாலி, மெட்ராஸ் , ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் லிங்கேஷ், ஹீரோவாக களமிறங்கி இருக்கும் படம் தான் என் காதலே. இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கி இருக்கும் இப்படத்தில், லிங்கேஷ் , காட்பாடி ராஜன், திவ்யா தாமஸ், லேயா , மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு , தர்ஷன் என பலர் நடித்துள்ளனர். ஸ்கைவாண்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜெயலட்சுமி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கும் நடிகர் லிங்கேஷ் ஏற்கனவே 'காலேஜ் ரோடு' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அம்பி: நகைச்சுவையில் கலக்கி வரும் நடிகர் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் அம்பி. இயக்குநர் பாஸர் ஜெ. எல்வின் இயக்கி இருக்கும் இப்படத்தில், அஸ்வினி சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன் ராஜ், ஷர்மிளா , ஆர்த்தி, வித்யா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மே 9ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ளார். அம்பியாக இருக்கும் ரோபோ சங்கர், ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரிய வீரன் என அனைவரும் நம்புகின்றனர். ஆனால், உண்மையில் வீரன் இல்லை என்பது அம்பிக்கு மட்டுமே தெரியும், இந்த சூழ்நிலையில், மற்றவர்களிடம் மாட்டிக் கொண்ட நாயகன், அம்பியாகவே இருந்தாரா, அந்நியனாக மாறினாரா என்பது தான் அம்பி படத்தின் கதை.

சவுடு: இயக்குனர் ஜெயந்தன் அருணாசலம் இயக்கி உள்ள படம் சவுடு, இப்படத்தில், மறைந்த நடிகர் போண்டாமணி, சாப்ளின் பாலு, வைகாசிரவி, கிளிமூக்கு ராமச்சந்திரன் , மீசை ராதாகிருஷ்ணன், பொன்ராம், ஸ்ரீ கண்ணன், பகவதி பாலா, கீர்த்தி விக்னேஷ், ஆசிபா, கே.ஜி.ஆர். என பலர் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து காணாமல் போவதால், ஊரில் உள்ள அனைவரும் கவலை அடைகின்றனர். பெண்கள் காணாமல் போவது ஏன்.. அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பது தான் சவுடு திரைப்படத்தின் கதை. இப்படம் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

எமன் கட்டளை: மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் எமன் கட்டளை. இப்படத்தில், அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர் ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.கே இசையமைத்திருக்கிறார். இரு நண்பர்கள் செய்த தவறால் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போகிறது. இதனால், பெண்ணின் தந்தை விஷம் குடித்து விடுகிறார்கள். இதை கேள்விபட்ட அன்பு, வேதனையில் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு எமதர்மராஜா கட்டளைப்படி 60 நாட்களுக்குள் இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் எமன் கட்டளை படத்தின் கதை.

அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர், இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் கலியுகம். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. அதே போல யாமன் திரைப்படமும் வரும் 9ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X