Karuppu Teaser: கஜினி வாட்டர்மெலான் சீனை ரீ-க்ரியேட் செய்த சூர்யா.. கருப்பு டீசர் எப்படி இருக்கு?

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தை இந்தியில் அமீர்கான் ரீமேக் செய்து நடித்திருந்தார். அங்கேயும் பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டராக அந்த படம் மாறியது. இத்தனைக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான Memento படத்தில் இருந்து மூலக்கதையை சுட்டுத்தான் முருகதாஸ் படம் எடுத்தார் என சர்ச்சைகள் வெடித்தன.

அந்த படத்தில் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் சூர்யா செம கச்சிதமாக நடித்திருப்பார். அவர் சாப்பிடும் வாட்டர்மெலான் காட்சியை வைத்தே, லேட்டஸ்ட்டாக வாட்டர்மெலான் ஸ்டார் என திவாகர் என்பவர் டிரெண்டாகி வருகிறார்.

Gajini watermelon scene recreated in Karuppu goes trending in social media

இந்நிலையில், அவருக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு அடிப்பது போல, மீண்டும் அந்த வாட்டர்மெலான் சிக்னேச்சர் சீனை ரீக்ரியேட் செய்து சூர்யாவே கருப்பு படத்தில் நடித்து இருப்பதை டீசரில் பார்த்த ரசிகர்கள், ஆர்ஜே பாலாஜி, ஆதிக் ரவிச்சந்திரன் போல ஏகப்பட்ட ரெஃபரன்ஸ்களை படத்தில் வைத்திருப்பார் என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

கர்ஜிக்கும் சூர்யா: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியானது. டீசர் முழுக்கவே சூர்யா மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற நோக்கில் கட் செய்துள்ளனர். ஹீரோயின் த்ரிஷாவோ அல்லது படத்தின் வில்லன் யார் என்பது குறித்து எந்தவொரு தடத்தையும் பார்க்க முடியவில்லை. சாய் அபயங்கரின் பேக்கிரவுண்ட் பாடல் நச்சென இருக்கிறது. சூர்யா சிங்கம் படங்களுக்குப் பிறகு கர்ஜிப்பதை திரையில் ஃபிரேம் பை ஃபிரேம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனே பெஸ்ட்டாகவே உள்ளது. கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு சூர்யாவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை ஆர்ஜே பாலாஜி கொடுப்பார் என்பது உறுதியாக தெரிகிறது.

கஜினி வாட்டர்மெலான் சீன்: வெறும் ஆக்‌ஷன் சீன் படமாக இருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து குடும்பத்துடன் சிரித்துப் பார்க்க முடியாது என்கிற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்து வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜி படத்தில் அந்த பிரச்னையே இருக்காது, நிச்சயம் காமெடிகளை சரியாக தூவி இருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். டீசரிலேயே கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டே அவரது ஆட்களை விலகிப் போக சொல்லி விரலில் சிக்னல் கொடுப்பார். அதே போன்ற ஒரு காட்சி கருப்பு படத்தின் டீசரில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தீபாவளி சரவெடி: இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2 படம் வருவதாகவே இருந்தது. கடைசியில், அண்ணன் சூர்யாவுக்காக வழிவிட்டு அவர் பொங்கலுக்கு விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுடன் மோத முடிவு எடுத்துள்ளார். கங்குவா, ரெட்ரோ படங்களில் விட்டதை கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு சூர்யா பிடித்து விடுவார் என்றும் இந்த ஆண்டு கூலி படம் மட்டுமில்லை, அதனை தொடர்ந்து சூர்யாவின் கருப்பு படமும் வசூல் வேட்டை நடத்தும் என ரசிகர்கள் இப்போதே கெத்துக் காட்டத் தொடங்கி விட்டனர். ரெட்ரோ படத்தின் நான் தியேட்டரிக்கல் வியாபாரத்துடன் சேர்த்து படம் 230 கோடி அள்ளிய நிலையில், கருப்பு படம் 300 கோடிக்கு மேல் லாபம் ஈட்டுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X