தவிக்கும் கோலிவுட்.. தூள் கிளப்பும் டோலிவுட்.. கேம் சேஞ்சர், டாக்கு மகராஜ் வசூல் இத்தனை கோடியா?

ஹைதராபாத்: கடந்த ஆண்டு பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கை ஆரம்பித்து வைக்க, கல்கி 2898 ஏடி, தேவரா மற்றும் புஷ்பா 2 உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸை எங்கேயோ கொண்டு சென்றன. இந்நிலையில், இந்த சங்கராந்திக்கும் பல டாப் ஹீரோக்களின் படங்கள் அங்கே வெளியாகி இருப்பதால் கோலிவுட் நிலைமை இந்த பொங்கலுக்கும் ரொம்பவே டல் அடித்து காணப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர், பால கிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல் நடிப்பில் வெளியாகி உள்ள டாக்கு மகராஜ் மற்றும் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான சங்கராந்தி வஸ்துன்னாம் என 3 படங்களும் வசூல் வேட்டை நடத்தி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

game changer daaku maharaaj box office

கோலிவுட்டில் வெளியான 4 படங்களின் பொங்கல் கலெக்‌ஷனை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் கூட பாலகிருஷ்ணாவின் டாக்கு மகராஜ் வசூலை கூட நெருங்க முடியாது என்பது தான் நம்பலைன்னாலும் நிதர்சனமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சர் வசூல்: கடந்த ஜனவரி 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 106 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் 186 கோடி ரூபாயை உலகளவில் வசூல் ஈட்டியதாக படக்குழு அறிவித்த நிலையில், அதனை தொடர்ந்து வெளியான கடுமையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாள் பாக்ஸ் ஆபிஸ் போஸ்டரே வெளியாகவில்லை.

டாக்கு மகராஜ் வசூல்: பாபி கோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டாக்கு மகராஜ் திரைப்படம் கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியாகி கேம் சேஞ்சர் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக அந்த படம் 3 நாட்களில் 48.05 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி வசூலை கடக்கவுள்ள நிலையில், இந்த வாரம் முடிவில் 100 கோடி வசூலை பாலகிருஷ்ணா அள்ளி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோகத்தில் கோலிவுட்: மத கஜ ராஜா படத்தை தவிர கோலிவுட்டில் பொங்கலுக்கு வெளியான எந்தவொரு படத்தையும் மக்கள் பார்க்க ஆர்வம் காட்டாத நிலையில், விஜய், அஜித், ரஜினிகாந்த் படங்கள் இந்த ஆண்டும் வரவில்லையே என கோலிவுட் தியேட்டர் ஓனர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, விஜய்யின் தளபதி 69, தனுஷின் இட்லி கடை, கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்தது போல இந்த ஆண்டும் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X