Game Changer Day 2 BO: ஷங்கரின் அரசியல்.. ராம் சரணின் டபுள் ஆக்‌ஷன்.. கேம் சேஞ்சர் 2வது நாள் வசூல்!

சென்னை: பணமே இல்லாத அரசியல் கொள்கை கொண்ட ஹீரோவின் படத்தை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்க ஷங்கரால் மட்டுமே முடியும். படத்தின் காட்சிகளை விட பாடல்களுக்கு பார்த்து பார்த்து பல கோடிகளை கொட்டி செலவு செய்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளிலேயே 186 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தில் ராஜு தில்லாக அறிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்டிஆரின் தேவரா, விஜய்யின் கோட் உள்ளிட்ட படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட் அதிகளவில் இருந்ததை போலவே கேம் சேஞ்சரின் வசூலும் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறதே என ட்ரோல்கள் கிளம்பியுள்ளன.

game changer game changer box office ram charan

ஆனால், அதையெல்லாம் பார்த்தால் பொழைப்பை நடத்த முடியுமா என படத்திற்கான ஹைப்பை முடிந்தவரை படக்குழு அதிகரித்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களே தலை சுற்றும் அளவுக்கு முதல் நாள் வசூல் வந்த நிலையில், 2வது நாள் வசூல் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு?: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, ஸ்ரீகாந்த், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் டோலிவுட் ரசிகர்களையும் கோலிவுட் ரசிகர்களையும் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறது. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் சில பாடல்கள் ரசிகர்களை தியேட்டரில் வியக்க வைக்கின்றன. ராம் சரணின் டபுள் ஆக்‌ஷன், அஞ்சலியின் நடிப்பு, எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் உள்ளிட்டவை சுமாரான கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற இயக்கம் என படத்தை உட்கார்ந்து பார்க்க வைத்துள்ள நிலையில், ஹிட் அடித்துள்ளது.

பொங்கல் வசூல் வேட்டை: இந்த பொங்கல் விடுமுறையை அப்படியே பயன்படுத்தி மொத்த வசூலையும் அள்ளிக் கொள்ளலாம் என நினைத்த ராம் சரண் ஜனவரி 10ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினாலே பட்ஜெட்டுக்கும் மேல் பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாள் வசூல் எவ்வளவு?: முதல் நாள் வசூல் 186 கோடி ரூபாய் என கேம் சேஞ்சர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 2வது நாளான சனிக்கிழமை படத்தின் வசூல் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 220 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படக்குழு 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் போஸ்டரை இன்று வெளியிடவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X