Game Changer First Review: ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துக்கு வெளியான முதல் விமர்சனம்.. தேறுமா?

சென்னை: ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 என ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை காண்பித்து ரசிகர்கள் எடுக்கும் டிக்கெட்டுக்கு உலகத்தையே சுற்றி காண்பித்துக் கொண்டிருந்த ஷங்கரை இந்திய சினிமாவே இந்தியன் 2 எனும் ஒரே ஒரு படத்தின் தோல்வி காரணமாக அதிகளவில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தது.

பல கோடி பட்ஜெட்டில் மீண்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் என்பதால் ஏற்பட்ட ஹைப் தான் அந்த படத்தின் படுதோல்விக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியன் 2 ரசிகர்களை கனெக்ட் செய்யவில்லை என்பதே தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அடுத்த படத்தில் நிச்சயம் ரசிகர்களை கவருவேன் என்றும் ஷங்கர் உறுதியளித்துள்ளார்.

game changer shankar review

இந்நிலையில், ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனமாக இயக்குநர் அறிவழகன் போட்டுள்ள ட்வீட்டை ராம் சரண் ரசிகர்கள் பார்த்து ரொம்பவே ஹேப்பியாகி உள்ளனர்.

பிரம்மாண்டத்தின் உச்சம்: 100 ரூபாய்க்கும் குறைவாக டிக்கெட் எடுத்து படம் பார்த்தவர்களுக்கு 7 அதிசயங்களையும் ஜீன்ஸ் படத்தில் காண்பித்து வியக்க வைத்தவர் தான் ஷங்கர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரஜினிகாந்தை வைத்து எந்திரன், 2.0 படங்களை கொடுத்து இன்றும் தமிழ் சினிமாவின் அதிக வசூல் படமாக 800 கோடி வசூலுடன் 2.0 முதலிடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். ஆர்ஆர்ஆர் படம் மூலம் க்ளோபல் ஸ்டாராக உருவாகியுள்ள ராம் சரண் நடிப்பில் கலர்ஃபுல்லாகவும் கன்டென்ட் ஃபுல்லாகவும் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் ரசிகர்களை திருப்திப்படுத்துமா? அல்லது இன்னொரு இந்தியன் 2 போல தலைவலியை கொடுக்குமா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாகவே ஆந்திராவை தவிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற இடங்களில் படத்திற்கான புக்கிங் சூடு பிடிக்கவில்லை என்கின்றனர்.

கேம் சேஞ்சர் முதல் விமர்சனம்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி, வெண்ணிலா கிஷோர், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் அரசியல்வாதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கும் நடக்கும் யுத்த களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தை பார்த்துவிட்ட இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் படத்துக்கு அனிருத் ஸ்டைலில் ஃபயர் விட்டு எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். நிச்சயம் இந்த படம் ஷங்கருக்கும் ராம் சரணுக்கும் கம்பேக் படமாக அமையும் என்றும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் படமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரம், வல்லினம், குற்றம் 23, தமிழ்ராக்கர்ஸ், சப்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அறிவழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

game changer shankar review

கில்லி மாதிரி இருக்கும்: இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை புரமோட் செய்யும் விதமாக அளித்த பேட்டியில் கில்லி, போக்கிரி, தூள் போன்று மாஸாகவும் ரேஸியாக செல்லும் கமர்ஷியல் படங்கள் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் தெலுங்கில் வெளியான ஒக்கடு, போக்கிரி படங்களுக்கும் தான் தீவிர ரசிகன் என்றும் இந்த கேம் சேஞ்சர் படம் அந்த படங்களை போல பரபரவென இருக்கும் என்றும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை தியேட்டர்களில் கொண்டாடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X