Game Changer: கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி... பட்ஜெட் இத்தனை கோடியா..? ஷங்கர் சம்பவம் லோடிங்!

ஐதராபாத்: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர்.

ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

 Game Changer: Game Changer 1st single is Confirmed to release on October 28

இதில் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை ஷங்கர் கன்ஃபார்ம் செய்துவிட்டாராம்.

அதன்படி, வரும் 28ம் தேதி கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், அந்தப் பாடலின் பட்ஜெட் விவரம் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி
அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஷங்கர், தனது பிரம்மாண்டமான மேக்கிங் மூலம் ரசிகர்களை பிரமிக்க வைத்தார். காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், ஐ, எந்திரன், 2.O என ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்தும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.

இந்நிலையில், சில வருடங்களாக திரும்பிய பக்கமெல்லாம் பஞ்சாயத்துகளில் சிக்கித் தவித்த ஷங்கர், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும், தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2ம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களில் ராம் சரணின் கேம் சேஞ்சர் முதலில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர். அஞ்சலி உட்பட மேலும் பலரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.

ராம் சரண் பிறந்தநாள் ஸ்பெஷலாக கேம் சேஞ்சர் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள், வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளதாம். தமன் இசையில் இந்தப் பாடலை 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்துள்ளாராம். இதனால், கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக இந்தப் பாடல் இணையத்தில் லீக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராம் சரணும் கியாரா அத்வானியும் ஆயிரக்கணக்கான குரூப் டான்ஸர்களுடன் நடனமாடுவதாக இருந்தது. ஆனால், அது ஃபைனல் வெர்ஷன் என சொல்லப்பட்டதால், இப்போது ஒரிஜினல் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அபிஸியல் அப்டேட், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X