Game Changer: கேம் சேஞ்சர் இந்தியன் 2 டோலிவுட் வெர்ஷனா... ராம் சரண் கேரக்டர்..? ஷங்கர் மாறவே இல்ல
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக ராம் சரணின் கேரக்டர் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியன் 2 ஸ்டைலில் கேம் சேஞ்சர்
ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் ஷங்கர், தற்போது இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அதன்படி, கமல்ஹாசனின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் படங்கள் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா ஜானரில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளன.

முதன்முறையாக ராம் சரணுடன் இணைந்துள்ள ஷங்கர், கேம் சேஞ்சர் படத்தை பொலிட்டிக்கல் ஜானரில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர், டோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் ராம் சரணின் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் அப்பா, மகன் என இரட்டை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், இந்தியன் 2 படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதுவும் பொலிட்டிக்கல் ஜானர் மூவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எல்லா விதத்திலும் இந்தியன் 2 படத்தை காப்பி அடித்து கேம் சேஞ்சர் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கேம் சேஞ்சர் இந்தியன் 2 படத்தின் டோலிவுட் வெர்ஷனா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசையில் 'ஜருகண்டி' எனத் தொடங்கும் இந்தப் பாடலை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார் ஷங்கர். அதேபோல் கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முடியும் என்றும், அதன்பின்னரே ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











