Game Changer: கேம் சேஞ்சர் படத்துக்காக 15 கோடி பட்ஜெட்ல எடுத்த Song... மொத்தமா லீக் ஆயிடுச்சே!!
ஐதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் கேம் சேஞ்சர்.
மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி முழுவதும் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாடல் லீக்கானதால், ஷங்கர் உட்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மொத்தமாக லீக்கான கேம் சேஞ்சர் பட பாடல்: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். தற்போது ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். முதன்முறையாக ராம் சரணுடன் இணைந்துள்ள ஷங்கர், கேம் சேஞ்சர் படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர். மேலும், அஞ்சலி உட்பட பலரும் கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டாகியுள்ளனர். ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ராம் சரண் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் கேம் சேஞ்சர் படத்தை பக்காவாக பார்த்து பார்த்து செதுக்கி வந்தார் ஷங்கர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி முழுவதும் லீக்காகி வைரலாகியுள்ளது. வழக்கமாக ஷங்கர் படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பார். ஆனால், இந்தப் படத்துக்கு தமனுடன் கூட்டணி வைத்துள்ளார் ஷங்கர். இப்போது அதுவே அவருக்கு வினையாகிவிட்டது. தமன் இசையில் கேம் சேஞ்சர் படத்துக்காக உருவான ஒரு பாடல் இணையத்தில் லீக்காகியுள்ளது.
ராம் சரணும் கியாரா அத்வானியும் ஆயிரக்கணக்கான குரூப் டான்ஸர்ஸுடன் நடனமாடும் இந்தப் பாடல், 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம். கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள இந்தப் பாடல் தான் இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இதனால் ஷங்கர் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேநேரம் கேம் சேஞ்சர் பட பாடலை ஷேர் செய்ய வேண்டாம் எனவும் படக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே இணையத்தில் லீக்கான இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் இன்னும் ரெடியாகவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இன்னும் ஃபைனல் எடிட்டிங் முடியாமலும், ஒரிஜினல் சிங்கர் வெர்ஷனும் இல்லாமல் தான் கேம் சேஞ்சர் பாடல் லீக்கானதாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











