Game Changer: கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள்... திடீரென முடிவை மாற்றிய படக்குழு... என்ன காரணம்?
ஐதராபாத்: ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார்.
இதில் கேம் சேஞ்சர் படத்தில் டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், திடீரென கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அபிஸியலாக தெரிவித்துள்ளது.

கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸில் சிக்கல்: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். ஒருபக்கம் உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் டோலிவுட் மெகா பவர்ஸ்டார் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டுமே பான் இந்தியா படங்களாக அடுத்தாண்டு வெளியாகிறது.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். ராம் சரண் பிறந்தநாள் ஸ்பெஷலாக கேம் சேஞ்சர் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தீபாவளி ஸ்பெஷலாக கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தமன் இசையில் ஜருகண்டி என்ற டைட்டிலில் இந்தப் பாடல் உருவாகியிருந்தது.
முக்கியமாக இந்தப் பாடல் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்துள்ளாராம் ஷங்கர். சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பாடல் இணையத்தில் லீக்காகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜருகண்டி பாடலை தீபாவளி ட்ரீட்டாக எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதாவது கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜருகண்டி பாடல், நாளை வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.

சில டெக்னிக்கல் காரணங்களுக்காக கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகாது. அதற்குப் பதிலாக இன்னொரு நாளில் ரிலீஸாகும் என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
முன்னதாக ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் கடந்த 3ம் தேதி வெளியாகியிருந்தது. கமலின் இந்தியன் தாத்தா கேரக்டருக்கான இன்ட்ரோவாக இந்த வீடியோ வெளியானது. ஆனால், மேக்கிங், அனிருத்தின் பிஜிஎம் ஆகியவை நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. அதேபோல், கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் இருந்துவிடக் கூடாது என ராம் சரண் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











