Game Changer: ஷங்கரின் RC 15 பட டைட்டில் அறிவிப்பு... ராம் சரண் பிறந்தநாளில் வெளியான அப்டேட்

ஹைதராபாத்: டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் RC 15 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியானது முதல் RC 15 என்ற டைட்டிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ராம் சரணின் RC 15 பட டைட்டில் Game Changer என ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.

 ராம் சரண் பிறந்தநாள்

ராம் சரண் பிறந்தநாள்

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரங்கஸ்தலம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், கடந்தாண்டு ராஜமெளலி இயக்கிய RRR படத்திலும் மாஸ் காட்டியிருந்தார். இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் மேடை வரை தடம் பதித்த ராம் சரண், இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ராம் சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 RC 15 டைட்டில் அறிவிப்பு

RC 15 டைட்டில் அறிவிப்பு

RRR படத்திற்குப் பின்னர் ஷங்கர் இயக்கும் RC 15 ப்ராஜக்ட்டில் கமிட்டானார் ராம் சரண். தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. முதன்முறையாக ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு RC 15 டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பொலிட்டிக்கல் கேம் சேஞ்சர்

பொலிட்டிக்கல் கேம் சேஞ்சர்

RC 15 குறித்த அறிவிப்பு வெளியான போதே இது அரசியல் பின்னணியில் உருவாகும் படம் என சொல்லப்பட்டது. தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாகவே RC 15 டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் டைட்டில் Game Changer என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த டைட்டிலுக்கான ப்ரோமோ டீசரும் வெளியாகியுள்ளது. அதில், அரசியலை மாற்றியமைக்கும் கிங்காக ரம் சரணின் கேரக்டர் இருக்கும் என லீட் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஷங்கரின் மேஜிக் என்ன?

ஷங்கரின் மேஜிக் என்ன?

ஷங்கர் இயக்கத்தில் இறுதியாக 2018ம் ஆண்டு 2.O திரைப்படம் வெளியானது. அதன்பிறகு வெளியாகும் திரைப்படமாக கேம் சேஞ்சர் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷங்கரின் திரைப்படம் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சம், ஊழல் என எப்போதுமே அரசியல் பின்னணியில் படங்கள் எடுப்பதே ஷங்கரின் வழக்கம். அதன்படி கேம் சேஞ்சர் திரைப்படமும் அதே பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

 கேம் சேஞ்சர் ரிலீஸ் தேதி

கேம் சேஞ்சர் ரிலீஸ் தேதி

இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இந்த இரண்டு படங்களுமே இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. RC 15 டைட்டில் Game Changer என அறிவித்த படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X