»   »  கம்முன்னா கம்மு கம்முனாட்டி கோ..... மனோரமாவின் சூப்பர் வசனங்கள்

கம்முன்னா கம்மு கம்முனாட்டி கோ..... மனோரமாவின் சூப்பர் வசனங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது.

விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.

வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் பேச்சை கேட்காமல் கம்முன்னு கெட என கனீர் என்ற குரலில் கூறுவார்.

நாளைக்கே விடுதலைப் பத்திரத்துடன் வருகிறேன் என்று சம்பந்தி கூறியதும் மனோரமா அவரைப் பார்த்து ஆல்பார்ட்டு விடுதலைப் பத்திரத்துடன் கம்முன்னா கம்மு கம்முன்னாட்டி கோ என்பார்.

அந்த காட்சியில் அவர் பேசிய வசனங்கள் இன்றும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Manorama's dialogue gammunu keda from Samsaram adhu minsaram movie is famous even now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil