நிலையில்லா வாழ்கையிது.. கானா பாலாவின் புதிய ஆல்பம்..!

சென்னை : கானா பாலா தானே எழுதி ஒரு பாடலை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.

ஆறு அடி வீடு என்ற ஆல்பத்தை தற்போது உருவாக்கியுள்ள கானா பாலா. அதில் இறப்பு பற்றியும் இந்த வாழ்கை எவ்வளவு நிலையில்லாதது என்பதையும் சோக கானா பாடலாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு தன் நண்பர் கமலநாதனுடன் இணைந்து வரிகளும் அமைத்துள்ளார்.

 Gana bala has released a new album song

இந்த பாடலில் வாழ்கை நிலையில்லா காத்தாடி போல நூல் அறுந்தால் நாம் வானத்தில் பறந்துவிடுவோம் என்ற வரிகளிலிருந்து ஆரம்பிக்கிறது பின்னர் வாழ்கை எந்த மாதிரியான சந்தோஷங்களை கொண்டிருந்தாலும் நமக்கு இறுதியில் இருப்பது வெறும் ஆறு அடி வீடு என்பதை தனது குரலின் மூலம் பாடியிருக்கிறார்.

கானா பாலா சினிமாக்களில் சந்தோசம், சோகம், காதல் தோல்வி, இறப்பு போன்ற பலவித கானாக்களை பாடியிருக்கிறார். 2007ல் சில சிறிய வாய்ப்புகள் மூலம் திரையுலகில் பாட ஆரம்பித்தவர் பின் அட்டகத்தி படத்தின் 'ஆடி போனா ஆவணி' பாடலின் மூலம் பெரும் புகழை அடைந்தார் அன்றிலிருந்து இன்று வரை சினிமாக்களில் பல கானா பாடல்களை பாடி வருகிறார் .

கானாபாலா பாடகரை தாண்டி தனது இயல்பு வாழ்விலும் புரட்சிகரமான பல விஷயங்களை செய்து வருகிறார். தனது வாழ்விடத்தை சுற்றி பயிலும் ஏழை மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு படிப்பு செலவுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

 Gana bala has released a new album song

கானா பாலா மக்களுகான பல கருத்து மிகுந்த பாடல்களை கானா வடிவில் தனது குரலில் பாடி வருகிறார். இந்த பாடல்கள் அனைத்திலும் தானே வரிகளும் எழுதிவருகிறார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் ஆறு அடி வீடு பாடல் தற்போதைய நிலையை எடுத்துரைத்தும் வாழ்கை நிலையில்லாதது என்பதை வலியுறுத்தியும் அமைந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X