2208 ஓட்டுகளில் வெற்றியை நழுவவிட்ட கானா பாலா... என்ன இப்படி ஆயிடுச்சு!

சென்னை : பிரபல கானா பாடகர் கானா பாலா நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

சென்னை திருவிக நகர் 72வது வார்டில் அவர் போட்டியிட்ட நிலையில் 2208 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணனிடம் கானா பாலா தோல்வியடைந்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிகமாக இளைஞர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். இதன்மூலம் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்களும் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளனர்.

கானா பாலா போட்டி

கானா பாலா போட்டி

இதனிடையே, இந்த தேர்தலில் பிரபல கானா பாடகர் கானா பாலா திரு.வி.க.நகர் 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். தான் பிறந்த இடத்திற்கு சிறப்பான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்வகையில் தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தேர்தலுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

கானா பாலா தோல்வி

கானா பாலா தோல்வி

இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் கானா பாலா 2208 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணனிடம் தோல்வியடைந்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா 6095 வாக்குகளும் திமுக வேட்பாளர் சரவணன் 8303 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

வெற்றிக்கான நம்பிக்கை

வெற்றிக்கான நம்பிக்கை

முன்னதாக கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இதே இடங்களில் போட்டியிட்டு கானா பாலா இரண்டாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டதால் அவர் கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னணியில் இருந்த கானா பாலா

முன்னணியில் இருந்த கானா பாலா

வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளரை விட முன்னிலையில் கானா பாலா இருந்தார். இறுதியில் இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவர் 6095 வாக்குகள் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X