சீ போ நாயே பொறுக்கி...: அட திட்டலைங்க கானா பாலா பாட்டு!
சென்னை: எவன் படத்தில் வரும் சீ போ நாயே பொறுக்கி என்ற பாடலில் கானா பாலா காதல் டிப்ஸ் கொடுக்கிறார்.
புதுமுக இயக்குனர் துரை முருகனின் படம் எவன். திலீபன் புகழேந்தி மற்றும் தீப்தி மான்னே நடிக்கும் இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட், காதல் தூக்கலாக இருக்குமாம். துரை முருகன் முன்னதாக தயா, கருப்பசாமி குத்தைகைக்காரர், கோலி சோடா ஆகிய படங்களில் இணை இயக்குனராக இருந்துள்ளார்.
அவரின் எவன் படத்தில் பாடகர் கானா பாலா ஒரு பாடல் மூலம் காதலுக்கு டிப்ஸ் வழங்குகிறார். அதை கொஞ்சம் பார்ப்போம்.

சீ போ நாயே பொறுக்கி
சீ போ நாயே பொறுக்கி சீ போ நாயே பொறுக்கி... அட நான் திட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள். பாட்டே இப்படித் தான் ஆரம்பிக்கிறது. அதாவது சீப் போ நாயே பொறுக்கின்னு திட்டினாலும் தித்திக்கும்டா லவ்ல தித்திக்கும்டா என்று பாலா பாடுகிறார்.

டிப்ஸ்
லைட் அவுஸ் வெளிச்சத்தில படகை திருப்புடா உன் ஒயிஃபா அவளை மாத்தி உன் லைஃப ஓட்டுடா இது தான் மாமு லவ்வுல சேஃப் ரூட்டுடா அதை தான் நானும் உனக்கு கத்து தர்றேன் டா என்று பாலா காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்.

தாஜ் ஹோட்டல்
தாஜ்மஹால் கட்டி வைச்ச காதல் வேறடா இப்ப தாஜ் ஹோட்டல் கூட்டிப் போற காலம் தானடா என்று காலம் மாறிப் போய்விட்டதை பாலா கூறுகிறார். பாஸ் தாஜ் ஹோட்டல் போக வேண்டும் என்றால் பர்ஸ் வெயிட்டாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்சர்
அவ பல்சர் பைக்க பார்த்தாதான் மனசு மாறுவா நீ எக்ஸல் சூப்பர ஓட்டினு வந்தா எவடா ஏறுவா என்கிறார் பாலா. அதாவது பவுசாக வந்து பல்சரில் இறங்கினால் தான் காதலி மதிப்பாள் என்கிறார் பாலா.
டேய் நல்லா வெளங்கும்டா.. ! (இது படிக்கிற உங்களோட மனக் குரல்)!!


Click it and Unblock the Notifications











