காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணின்னு பாடுன கானா பாலாவா இது.. வக்கீலாக மாஸ் காட்டுறாரே!

சென்னை: 56 வயதாகும் கானா பாலா ஒரு பாடகர் மட்டுமல்ல, வழக்கறிஞரும் கூட என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், வழக்கறிஞர் கோட் போட்டுக் கொண்டு கோர்ட்டில் கெத்தாக அவர் கொடுத்த லேட்டஸ்ட் போஸை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவரது ஜூனியர் ஒருவர் ஷேர் செய்த போஸ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் மருத்துவம் படித்து விட்டு அதையெல்லாம் வேண்டாம் என நடிக்க வந்துவிடுவார்கள். சிலர் நடித்துக் கொண்டே அரசியல், பிசினஸ் என பல துறைகளில் தங்களது ஆளுமைகளை மேலும், மெருகேற்றி வருவார்கள்.

Gana Bala working as a Lawyer too and his latest photo stuns fans

காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணின்னு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே ஆட்டம் போட வைத்த கானா பாலா பல ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் பணியாற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கானாவில் கலக்கிய பாலா: தமிழ் சினிமாவில் அனைத்து விடமான சங்கீதத்துக்கும் இசைக்கும் ரசிகர்கள் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். அதிலும், கானா பாடலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சென்னை பிரெசிடன்ஸி கல்லூரியில் படிக்கும் போது கானா பாடல்களை பாடி டிரெண்டானவர் தான் கானா பாலா. 2007ம் ஆண்டு வெளியான பிறகு படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான "பதினோறு பேரு ஆட்டம்" பாடலை பாடி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

காசு பணம் துட்டு மணி: பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தில் இடம்பெற்ற "ஆடி போனா ஆவணி பாடல் இவருக்கு மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. நடுக்கடலுல கப்பலை இறக்கி தள்ள முடியுமா பாடலும் அந்த படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பீட்சா, கண்ணு லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் பாடி வந்தார். சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற "காசு பணம் துட்டு மணி மணி" பாடல் அவரது மைலேஜை மேலும், உயர்த்தியது. பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டு கலக்கினார்.

வழக்கறிஞர் கானா பாலா: திடீரென வக்கீல் கோட் சூட்டில் கானா பாலாவை பார்த்த ரசிகர்கள் ஏதாவது புதிய படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறாரா பாலா என நினைத்து விட்டனர். ஆனால், கல்லூரியிலேயே சட்டம் படித்த பாலா வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், இரு முறை சுயேட்சையாக லோக்கல் முனிசிபில் தேர்தலிலும் இவர் போட்டியிட்டுள்ளார். அம்பேத்கரியத்தை பின்பற்றி வரும் பாலா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக சென்ற நிலையில், அவரது உதவியாளர் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X