Bigg Boss: பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்.. மொத்தமாக கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக் பா நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் அனைவரும் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். கானா வினோத் எடுத்து சென்ற பணப்பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 9வது சீசன் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கார் டாஸ்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்ததால், பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் விஜய்சேதுபதி ரெட்கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து, குறைந்த வாக்குகளை பெற்ற சுபிக்ஷா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் வந்தது. முன்பெல்லாம், தினமும் அந்த பணபெட்டியில் யாருக்கும் தெரியாமல் பணத்தை பிக் பாஸ் டீம் போட்டுவார்கள். ஆனால், இந்த முறை போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதில் வரும் பணத்தை அந்த பெட்டியில் போடப்பட்டது.

பணப்பெட்டி: பிக்பாஸ் வீட்டில் கானா வினோத், சபரி, திவ்யா கணேஷ், சாண்ட்ரா, அரோரா, விக்ரமன் என ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில், கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 9ன் டைட்டிலை வினோத் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் வகையில் கானா வினோத் ரூ.18 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.அவர் பிக் பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு 6 முதல் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அதன் படி 95 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததால், 7லட்சத்து 60 ஆயிரம் மற்றும் பணப்பெட்டியில் இருந்த 18 லட்சம் மொத்தமாக அவர் 25 லட்சத்தை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் ஏமாற்றம்: வினோத் ஒரு டைட்டில் வின்னர் மெட்டீரியல் என்பது அனைவருக்கும் தெரியும். 18 லட்சம் பணப்பெட்டி முடிவு எதிர்பாராதது, ஆனால், அவர் எதற்காக எடுத்தார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வினோத் பக்காவான பொழுதுபோக்கு நபர், நல்ல மனிதர். அவருக்கு எதிர்காலத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். நிச்சயமாக அவர் ஒரு பெரிய ஆளாக வருவார் என பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











