ப்பா... என்ன ஒரு டான்ஸ்… ‘காந்தாரி‘ பாடலுக்கு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்… வாய்பிளந்த ரசிகர்கள் !
சென்னை : நடிகை கீர்த்தி ரசிகர்கள் அனைவரும் மெய்மறந்து வாய்பிளக்கும் அளவுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார்.
இதுஎன்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஊ சொல்றியா மாமா
புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலான ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ஆட்டம்போடவைத்தது. குறிப்பாக சமந்தாவின் ரசிகர்கள் அனைவரையும் உச்சு கொட்ட வைத்து மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இதனால் பல நடிகைகளும் இதுபோன்ற பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷா இது
இந்நிலையில், நடிகை கீர்த்தி 'காந்தாரி' என்ற பாடலுக்கு அட்டகாசமான நடன அசைவுகளுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த பாடலில் கீர்த்தி சுரேஷ், அழகான சிவப்பு நிற எம்பிராய்டரி லெஹங்காவை அணிந்துள்ளார். இந்த பாடலில் முன்பு பார்த்ததைவிட அழகு பதுமையாகவே இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். காந்தாரி பாடலுக்கு பவன் சிஎச் இசையமைத்துள்ளார், பிருந்தா மாஸ்டர் இந்த பாடலை இயக்கி நடனம் அமைத்துள்ளார். பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று டிராண்டாகி வருகிறது.

புதுப்பொலிவுடன்
மகாநதி திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி பார்ப்பதற்கு மொழு மொழுவென இருந்தார். ஆனால், கடுமையான உடல் பயிற்சிசெய்து மிகவும் மெலிந்து காணப்பட்டார். ரஜினிகாந்துடன் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷா இது என நினைக்கும் அளவுக்கு எடை குறைந்து காணப்பட்டார். ஆனால், தற்போது வெளியாகி உள்ள பாடலில் புதுப்பொலிவுடன் பார்ப்பதற்கு அம்சமாக இருக்கிறார்.

பல படங்களில்
தற்போது கீர்த்தி வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போல ஷங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். மேலும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டாவில் நடித்துள்ளார். இப்படத்தில கீதா கோவிந்தம் திரைப்பட புகழ் பரசுராம் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் மே 12ந் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் மகேஷ்பாபுவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











