twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தி ஜெயந்தி 2022: காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள்!

    |

    சென்னை : மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினமான இன்று சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அகிம்சை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, அமைதியை இவ்வுலகிற்கு கற்றுக்கொடுத்தார். சகோதரத்துவத்துடன் அகிம்சையைக் கடைப்பிடித்து அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    அமைதியை கற்றுக்கொடுத்த காந்தியைப் பற்றி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு பல மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்?

    கலைத்தாயின் தலைமகன்.. அழியாப்புகழின் உச்சம்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!கலைத்தாயின் தலைமகன்.. அழியாப்புகழின் உச்சம்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

    காந்தி

    காந்தி

    காந்தியை பற்றிய திரைப்படம் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் திரைப்படம் காந்தி. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி நடிப்பில் 1982ல் வெளியான காந்தி திரைப்படம் இப்போது வரை ஒரு சிறந்த படமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரோகினி ஹட்டங்கடி, ரோஷன் சேத், அலிக் பதம்ஸி மற்றும் சயீத் ஜாஃப்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    9 ஆஸ்கர் விருது

    9 ஆஸ்கர் விருது

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்ற இத்திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. அதுமட்டுமில்லாமல், சிறந்த படம், நடிகர், இயக்குநர் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்ற இந்தப் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

    Nine Hours to Rama

    Nine Hours to Rama

    1963ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் Nine Hours to Rama. இந்தப் படத்தை கனடாவைச் சேர்ந்த மார்க் ராப்ஸன் இயக்கினார். காந்தியை நாதுராம் கோட்ஸே சுட்டுக் கொன்ற கோட்ஸேவின் வாழ்க்கையில் நடந்த ஒன்பது மணி நேர கதைதான் இது. அமெரிக்க வரலாற்றாசிரியர் ஸ்டான்லி வால்பர்ட் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

    ஹே ராம்

    ஹே ராம்

    உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய இந்த படம். தமிழ் சினிமாவில் காந்தி பற்றி பேசிய முக்கியமான படமாகும்.நாடு இரண்டாக பிரிக்கப்பட்ட போது வெடித்த மத வன்முறை இந்த படத்தில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கும்.2000ம் ஆண்டு தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தில் நசீரூதின் ஷா, ஷாருக் கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    லகே ரஹோ முன்னாபாய்

    லகே ரஹோ முன்னாபாய்

    முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' என்ற இந்திப் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தில் காந்தியின் ஆத்மாவால் ஆட்கொள்ளப்படும் ரவுடியான முன்னாபாய் அகிம்சை, அமைதி, சுத்தம் போன்ற காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிக்கிறார். வணிகரீதியாகப் பெரும் வெற்றியை இப்படம் பெற்றது. ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி இருந்தார்.

    English summary
    The biggest figure in India’s independence, Mahatma Gandhi life movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X