Gandhi Kannadi X Review: காந்தி கண்ணாடி ட்விட்டர் விமர்சனம்.. கேபிஒய் பாலா ஹீரோவாக கலக்கினாரா?
சென்னை: ஆதிமூலம் க்ரீயேஷன்ஸ் தயாரிப்பில் ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று மாலை சத்யம் தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் பாலாவின் காந்தி கண்ணாடி படத்துக்கான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் அடுக்கி உள்ளனர்.
விஜய் டிவியில் இருந்து ஒரு டஜன் பிரபலங்கள் சினிமாவுக்கு வந்துவிட்டனர். சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு, கவின், புகழ் வரிசையில் தற்போது கேபிஒய் பாலாவும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

கேபிஒய் பாலா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.
ஹீரோவானார் கோலிவுட்டின் சோனு சூட்: கொரோனா காலத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் இனிமேல் நான் வில்லன் நடிகர் இல்லை, ரியல் லைஃப் சூப்பர் ஹீரோ என்பதை நிரூபித்து இருந்தார். அவர் ஏகப்பட்ட பொதுமக்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செய்த உதவியை பார்த்து ஒட்டுமொத்த நாடே கொண்டாடியது. அதே போல தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்த அளவில் சம்பாதித்தாலும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். விரைவில் இலவச மருத்துவமனை கட்ட போராடி வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
நேச்சுரலா நடிக்கிறார் பாலா: ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் காந்தி கண்ணாடி படத்தை பார்த்துவிட்டு 5க்கு 3.25 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். கேபிஒய் பாலா ஹீரோவாக அட்டகாசமாக அறிமுகமாகியுள்ளார். நேச்சுரலா அவருக்கு என்ன வருதோ அப்படியே திரையில் தோன்றி நடித்துள்ளார். பாலாஜி சக்திவேலின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. நல்ல ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் எமோஷனலான கிளைமேக்ஸ் உடன் படம் உள்ளதாக ரமேஷ் பாலா விமர்சித்துள்ளார்.
ஓல்டு ஏஜ் லவ் ஸ்டோரி: வயதான காலத்தில் ஏற்படும் காதல் கதையை மையமாக வைத்து காந்தி கண்ணாடி படத்தை படமாக்கியுள்ளனர். பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா தான் படத்தில் ஹைலைட். கேபிஒய் பாலாவின் நடிப்பு நல்லா இருக்கு, கடைசியாக 30 நிமிட கிளைமேக்ஸ் காட்சி எமோஷனலாக என்னை ரொம்பவே கனெக்ட் செய்துவிட்டது என பாலாஜி என்பவர் விமர்சித்துள்ளார்.
கலவையான விமர்சனங்கள்: கேபிஒய் பாலாவின் படம் சுமாராகத்தான் உள்ளது என்றும் இன்னும் சூரி போல நல்ல இயக்குநர்களை தேடி அவர் செல்ல வேண்டும் என்றும் அப்போதுதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்கள் அமையும் என்றும் கூறுகின்றனர். நாளை திரையரங்குகளில் காந்தி கண்ணாடி படம் வெளியான பின்னர், மக்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்களா? இல்லையா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
வாழ்த்துகள் பாலா: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் காமெடி செய்துக் கொண்டிருந்த பாலா அப்படியே சிவகார்த்திகேயன் போல தொகுப்பாளராக மாறினார். தொண்டு உள்ளம் கொண்ட பாலா ஏகப்பட்ட ஆம்புலான்ஸ் வாங்கி தருவது, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ஆட்டோ வாங்கித் தருவது என பல உதவிகளை செய்து வரும் நிலையில், ஹீரோவாக உயர்ந்துள்ள அவருக்கு வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications











