காந்தி டாக்ஸ் டூ துரந்தர் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், சென்சார் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை. அதன் பின், பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியானது. இதையடுத்து, கடந்த வாரம் திரௌபதி 2 , மங்காத்தா ரீ ரிலீஸ் ஆகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இதையடுத்து, இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களை பார்க்கலாம்.
காந்தி டாக்ஸ் : விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த 'பேசும் பட'த்துக்குப் பிறகு, ஒரு மவுனப் படம் வெளியாவது சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

லாக் டவுன்: அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்டவுன் 30ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பல்சர்: அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் முரளி கிருஷ் இயக்கத்தில் 'கருப்பு பல்சர்' என்ற திரைப்படம் 30ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டையும் மதுரையும் மையமாக வைத்து உருவாகியுள்ள, கருப்பு பல்சர் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வா வாத்தியார்: நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார் படம் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியானது. எம்ஜிஆர் ரசிகனாக கார்த்திக் நடித்து இருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில், கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

துரந்தர் (இந்தி): ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம் துரந்தர். பாக்ஸ் ஆபிசில் சாதனைப்படைத்த இப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் 30ந் தேதி வெளியாகிறது. அதிரடியான காட்சிகள், ரன்வீரின் நடிப்பு நிச்சயம் உங்களை ஈர்க்கும். இந்த படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.
சர்வம மாயா( மலையாளம்): நிவின் பாலி நடித்துள்ள மலையாள திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் சர்வம மாயா. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. திகிலையும் நகைச்சுவையையும் கலந்து, 'சர்வம மாயா' ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பான மற்றும் தனித்துவமான மலையாள சினிமா பாணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஜியோஹாட்ஸ்டாரில் ஜனவரி 30ந் தேதி பார்க்கலாம்.
தல்டல்(இந்தி): க்ரைக் மற்றும் த்ரில்லர் பிரியர்களே மகிழ்விக்கும் வகையில் இந்த திரைப்படம் அமேசான் வீடியோவில் ஜனவரி 30ந் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் சஸ்பென்ஸுடன் யூகிக்க முடியாத, பல அடுக்குகள் கொண்ட குற்றவியல் நாடகமாக இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்


Click it and Unblock the Notifications











