காலுக்கு ஏத்த செருப்பா, செருப்புக்கு ஏத்த காலா.. ப்ளூ சட்டை மாறனின் ‘காந்தி டாக்ஸ்‘ விமர்சனம்!

சென்னை: மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்கத்தில் விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் ஹைதா​ரி, சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், 'காந்தி டாக்ஸ்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

இந்த படத்தில் அரவிந்த்சாமி ஒரு பெரிய கோடீஸ்வராக இருக்கிறார். ஒரு விபத்தில் இவரது குடும்பத்தில் இருந்த அனைவரும் இறந்து விடுகின்றனர். மற்றொரு சம்பவத்தில் சொத்துக்கள் அனைத்தும் பறிபோய்விட, இருக்கிற சொத்தை எப்படி பாதுகாப்பது என யோசித்துக் கொண்டு இருக்கிறார். மற்றொரு பக்கத்தில் விஜய்சேதுபதி, தனது வயதான அம்மாவை கவனித்துக் கொண்டு வேலை தேடி அலைகிறார். வேலையில்லாததால் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். விஜய்சேதுபதி காதலிக்கும் அதிதி ராவ்விற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

Gandhi talks blue sattai maran
Photo Credit:

காந்தி டாக்ஸ்: நேர்மையாக இருக்கும் விஜய்சேதுபதி வேலை தேடி செல்லும் இடங்களில் எல்லாம், லஞ்சம் கேட்கிறார்கள். இவர் நேர்மையாக இருப்பதால் லஞ்சம் கொடுக்க மறுக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வெறுத்துப்போன விஜய்சேதுபதி கொள்ளை அடிக்கும் முடிவுக்கு வருகிறார். அப்போதுதான், அரவிந்த்சாமி பெரிய பணக்காரர் என்பதால், அவரது வீட்டுக்குள் கொள்ளை அடிக்க நுழைகிறார் விஜய் சேதுபதி. அதே வீட்டிற்குள் ஒரு திருடனும் இருக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் கதை.

எல்லாமே மொக்க: இந்த படம் எந்த வசனமும் இல்லாத மௌன படம் என்பதால், இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் படத்தின் இயக்குனர். படத்தின் ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. குறிப்பாக நீதிமன்ற காட்சியில் நீதிபதி 'ஐ லவ் காந்தி' என்று மெசேஜ் போடுவது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதேபோல விஜய்சேதுபதி டீ கடைக்கு வேலை தேடி செல்வார் அந்தக் காட்சியும் வித்தியாசமாக நன்றாக இருந்தது. அது தவிர படத்தில் வரும் மற்ற 60 காட்சிகளும் செம மொக்க தான்.

காலுக்கு ஏத்த செருப்பு இல்ல: இந்த படம் மௌன படம் என்பதால் பல காட்சிகளை நடிப்பிலேயே மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால், யாரும் அப்படி செய்யவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் வந்த பேசும் படத்தை மையமாக வைத்து தான் இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். பேசும் படத்தில் அனைவருமே பேசக்கூடியவர்கள் தான், ஆனால் பேசுவதற்கான எந்த வாய்ப்பும் இருக்காது. ஆனால், இந்த படத்தில் செய்கையால், கை கால்களை ஆட்டி காட்சிகளை புரிய வைத்திருக்கிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என தெரியவில்லை. இந்த படத்தை பொருத்தவரை காலுக்கு ஏற்றபடி செருப்பு வாங்கவில்லை, செருப்பை வாங்கிவிட்டு அதற்கு ஏற்றபடி கால வெட்டி செருப்பில் சொறுகி இருக்கிறார்கள். படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்றும் மனதில் நிற்கவே இல்லை. குறிப்பாக பிக் பாக்கெட் கதாபாத்திரம் எதற்கு வருகிறது என்றே தெரியவில்லை. காந்தி டாக்ஸ் படத்தில் வரும் கதாபாத்திரம் யாருமே பேசவில்லை, அதேபோல இந்த படத்தை பற்றி பேசுவதற்கும் எனக்கும் எதுவும் இல்லை என்ன ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பேசி இருக்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X