திரைத் துளி
சென்னை:
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட "காந்திதிரைப்படத்திற்கு முழு வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காந்தி திரைப்படம் முதலில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் பெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் காந்தி தமிழில் மொழி மாற்றம்செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது காந்தி படத்திற்கு தமிழக அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது.
சென்னையில் அரசு வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறப்பட்டிருப்பதாவது:
காந்தி படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிட்ட ரியல் இமேஜ் பிரைவேட் லிமிடெட்தமிழக அரசிடம் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
அதை ஏற்று தற்போது காந்தி திரைப்படத்திற்கு முதல்வர் கருணாநிதி முழு வரிவிலக்குஅளித்து உத்தரவிட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications











