காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும் சீன்ஸ்!

சென்னை: ஜீ5 தயாரித்து பலான காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸின் லிப்லாக் காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

கன்னாபின்னா எதிர்ப்புகள்

கன்னாபின்னா எதிர்ப்புகள்

ஜீ 5 நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட இந்த காட்மேன் வெப்சீரிஸ் ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கன்னாபின்னாவென எழுந்த எதிர்ப்புகளால் வெப்சீரிஸ் ரிலீஸ் ஆகாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

ஜீ5 தயாரிப்பில் உருவான வெப் சீரிஸ், சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக கண்டி பாத் என்ற வெப் சீரிஸின் 4 சீசன்களை தயாரித்தது ஜீ5 நிறுவனம். அதிலும் பலான காட்சிகள் இடம் பெற்று பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஓரினச்சேர்க்கையாளர்

ஓரினச்சேர்க்கையாளர்

தற்போது அந்நிறுவனத்தின் காட்மேன் வெப் சீரிஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் கண்டி பாத் சீசன் 2 வெப் சீரிஸின் சில காட்சிகள் வைரலாகி வருகிறது. கண்டி பாத் சீசன் 2வின் முதல் எபிசோடில் நடிகைகள் அன்வேஷ் ஜெய்ன் மற்றும் ஃபுளோரா சயினி ஆகியோர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தனர்.

லிப்லாக் வைரல்

லிப்லாக் வைரல்

அவர்களின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த சீசன் 5 எபிசோடுகளை கொண்டிருந்தது. இதன் மற்றொரு எபிசோடில் சீரிஸின் நாயகியும் நாயகனும் லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

ஆடை களைப்பு லிப்லாக் என நெருக்கமான பல அடல்ட் காட்சிகள் இந்த வெப்சீரிஸில் இடம் பெற்றுள்ளது. தற்போது ஜீ5 மற்றும் அன்வேஷி ஜெயினின் ஆப்பில் இந்த எபிசோடுகள் உள்ளன. பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும் அந்த காட்சியை நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

பல சலசலப்புகள்

பல சலசலப்புகள்

இந்த வெப் சீரிஸை சச்சின் மோகித் இயக்கியிருந்தார். தற்போது காட்மேன் வெப்சீரிஸ் ஆபாச காட்சிகள் மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்கள் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கண்டி பாத் வெப் சீரிஸ்களும் பல்வேறு சலசலப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X