Ganesh Chaturthi: வீர விநாயகா! மனைவியுடன் விநாயகர் சதூர்த்தி.. பிரமாண்டமான ஏற்பாட்டை செய்த ஆனந்த் அம்பானி
மும்பை: சனி, ஞாயிறு வந்தால் சின்னராசை எப்படி கையில் பிடிக்க முடியாதோ, அதேபோல் விநாயகர் சதூர்த்தி வந்துவிட்டால், அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி செம குஷி ஆகிவிடுவார். விநாயகரின் தீவிர பக்தரான ஆவர், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார். இந்த ஆண்டும் வெகு சிறப்பாக தனது மனைவியுடன் கொண்டாடவுள்ளார். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்களின் 'அன்டிலியா சா ராஜா' விநாயகர் சிலையை மேளதாளத்துடன் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் விநாயகர் சிலை அவர்களின் மும்பை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்வுக்காக அம்பானியின் இல்லம் மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரை அம்பானி குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு அழைத்து, விநாயகர் பூஜை நடத்த உள்ளனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அம்பானி வீடு மின்விளக்குகளாலும், பூக்களாலும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஊர்வலமாக சிலை வீட்டிற்கு கொண்டுவரப்ப்பட்ட போது ஆனந்த் மற்றும் ராதிகாவை சுற்றிலும் பாதுகாவலர்களும், மும்பை காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திரைப்பிரபலங்கள்: திரைத்துறையைப் பொறுத்தவரை, நானா படேகர், ஜிதேந்திரா, சோனு சூட், ரித்தீஷ் தேஷ்முக், அங்கிதா லோகண்டே, மாதுரி தீட்சித், சோனாலி பிந்த்ரே, அர்பிதா கான் ஷர்மா போன்ற பல பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியான இன்று, தங்களது இல்லங்களில் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடவுள்ளனர்.
பிரமாண்டமான கொண்டாட்டாம்: வீட்டில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுவது மட்டும் இல்லாமல், பல பிரபலங்கள் மும்பையில் உள்ள லால்பாக் சா ராஜா, கணேஷ் கல்லி சா ராஜா, சின்ச்போக்லி சா சிந்தாமணி போன்ற பிரபலமான இடங்களுக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வழிபடவுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பெருநகரங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. அம்பானி இல்லத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











