twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    களை கட்டியது விநாயகர் சதுர்த்தி…விமரிசையாக கொண்டாடிய திரையுலக நட்சத்திரங்கள்

    |

    சென்னை : எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்தவாறே புதுமையான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

    Recommended Video

    கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் | DIRECTOR E V GANESH CHAT | FILMIBEAT TAMIL

    கொரானா நோய் தொற்று பரவல் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாகவே இந்தியாவில் மிக வேகமாக வீரியத்துடன் பரவுவதை ஒட்டி இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிரஞ்சீவி, சமந்தா, பிரசன்னா, நானி உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் தங்களது வீடுகளில் விநாயகரை வைத்து வழிபட்டு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

    விநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து!விநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து!

    குதூகலமாக

    குதூகலமாக

    பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே நாடு முழுவதும் அனைவரது வீட்டின் அருகில் உள்ள தெருக்களிலும், வீடுகளிலும் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து ஆடல் பாடல் என குதூகலமாக இத்தனை ஆண்டுகள் நாம் அனைவரும் கொண்டாடி வந்த நிலையில் இந்த ஆண்டு கொரானா நோய்ப் பரவலின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விநாயகர் சதுர்த்தியை அவர்களது வீடுகளிலேயே எளிமையான முறையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இயற்கையான முறையில்

    இயற்கையான முறையில்

    இந்த அறிவிப்பை ஏற்ற மக்களும் தங்களது வீடுகளில் இயற்கையான முறையில் மண்ணில் செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு இந்த விநாயகர் சதுர்த்தியை எளிமையான முறையிலும் இயற்கையான முறையிலும் குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

    அவ்வையாரின் பொன் மொழி

    அவ்வையாரின் பொன் மொழி

    தமிழ் நடிகர் பிரசன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழர்களின் மூதாதையரான அவ்வையாரின் பொன் மொழிகளை பதிவிட்டு வீட்டில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியவாறு புகைப்படம் ஒன்றையும் அதில் பதிவிட்டுள்ளார்.

    தாய் கணேச மந்திரத்தை

    தாய் கணேச மந்திரத்தை

    பிரசன்னாவை தொடர்ந்து தெலுங்கு நடிகர் சர்வானந்த் வீட்டுத்தோட்டத்தில் மாமரத்தின் அடியில் களிமண்ணால் செய்த சிறிய பிள்ளையாரை வைத்து வழிபட அவருடன் இணைந்து அவரின் தாய் கணேச மந்திரத்தை கூறியவாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்.

    மஞ்சள் நிற ஆடையை

    மஞ்சள் நிற ஆடையை

    நடிகர் நானி வீட்டின் பூஜை அறையில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியவாறு தனது மகனுடன் இணைந்து ஒரே மாதிரி மஞ்சள் நிற ஆடையை அணிந்தவாறு மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் இப்பொழுது பதிவிட்டுள்ளார்.

    பாரம்பரியமான புத்தாடை

    பாரம்பரியமான புத்தாடை

    மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் குடும்பத்தாருடன் வீட்டில் பாரம்பரியமான புத்தாடை அணிந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி அந்தப் புகைப்படத்தையும் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு குட்டி பிள்ளையார்

    இரண்டு குட்டி பிள்ளையார்

    அதேபோல் நடிகை சமந்தாவும் வீட்டில் பூஜை அறையில் இயற்கையான முறையில் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு குட்டி பிள்ளையார் சிலையை வைத்து கொண்டாடியவாறு அந்த புகைப்படத்தை தற்பொழுது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மலர்களால் அலங்கரித்து

    மலர்களால் அலங்கரித்து

    அதேபோல் ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள ராஜ்குமார் ராவ் வீட்டில் மண்ணில் செய்யப்பட்ட அழகான பிள்ளையாரை வைத்து மஞ்சள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வழிபட்டவாறு இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்.

    வாழ்த்துக்களை தெரிவித்து

    வாழ்த்துக்களை தெரிவித்து

    இவ்வாறு பொதுமக்களுடன் இணைந்து பல்வேறு திரை பிரபலங்களும் இந்த விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்தவாறே கொண்டாடி ரசிகர்களுக்கு தங்களது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Ganesh Chaturthi celebrated by celebrities Actress and actor
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X