twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கணேஷ் வெங்கட்ராம் மாப்பு, அது மதுரை இல்லை தேனி..தேனி

    By Siva
    |

    Recommended Video

    கணேஷ், சின்னமனூர் மதுரை இல்ல தேனி மாவட்டம் பாஸ்.. !!

    தேனி: மதுரை மாப்பிள்ளையாக இருப்பதில் பெருமை அடைவதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிஸ்டர் ஜென்டில்மேன் பட்டம் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம். அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சரி பழைய கதையை விடுங்க. அவர் மாட்டுப் பொங்கல் கொண்டாடியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    தேனி

    தேனி மாவட்டத்தில் உள்ள மனைவி நிஷாவின் ஊரான சின்னமனூரில் மாட்டுப் பொங்கலை கொண்டாடியுள்ளார் கணேஷ் வெங்கட்ராம். அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மதுரை மாப்பிள்ளையாக இருப்பதற்கு பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் கணேஷ்.

    மாப்பிள்ளை

    சின்னமனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது. நீங்கள் தேனி மாப்பிள்ளை மதுரை மாப்பிள்ளை இல்லை என்று ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராமிடம் தெரிவித்துள்ளனர்.

    சேலை

    மாட்டுப் பொங்கல் கொண்டாட கிராமத்திற்கு வந்த நீங்களும், நிஷாவும் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்திருக்கலாமே. ஜீன்ஸ் போட்டா மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது என்று நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    நிஷாவையும், கணேஷ் வெங்கட்ராமையும் பார்த்த சின்னமனூர்காரர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர். மேலும் அடிக்கடி ஊர் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

    சொந்த ஊர்

    கணவரை டிவிஎஸ் எக்ஸ்.எல்.லில் அமர வைத்து சின்னமனூரை சுற்றிக் காட்டியுள்ளார் நிஷா. அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Ganesh Venkatram celebrated Mattu Pongal in wife Nisha's native place Chinnamanur. Netizens corrected him for tweeting proud to be a Madurai Mappillai as Chinnamanur is in Theni district.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X