இலங்கை குண்டுவெடிப்பில் 2 நண்பர்களை பறிகொடுத்த பிரபல நடிகர்

By Siva

பெங்களூர்: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் கன்னட நடிகர் கணேஷின் நண்பர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 58 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Ganesh lost two of his friends in Sri Lanka blasts

இலங்கை தாக்குதலுக்கு உலக தலைவர்கள், மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் கன்னட நடிகர் கணேஷின் நண்பர்கள் இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து கணேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீங்கள் இருவரும் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. புட்டராஜு மற்றும் மாரி கவுடா உங்களை மிஸ் பண்ணுவேன். இந்த கொடூர தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார் கணேஷ். 99 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X