லாக்டவுன் முடிந்தவுடன் இப்படித்தான் வேலைக்கு செல்வோம்..வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்

சென்னை :பரபரப்பாக வேளைக்கு செல்வது போல அழகான விடியோவை வெளியிட்டு உள்ளார் கணேஷ் வெங்கட்ராம்

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் சொல் கொரோனா.அணைத்து நாடுகளிலும் பரவிய இந்த தொற்று காரணமாக லட்ச கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.பல தொழிற்சாலைகள்,தொழில்கள் என அனைத்தும் முடக்கப்பட்டது.அதுமட்டுமின்றி தியேட்டர்கள்,மால்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் மூடப்பட்டன.மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர்.

ganesh venkatram is ready with josh

எப்பொழுது வழக்க நிலை திரும்பும் மீண்டும் எபொழுது வேலைக்கு செல்வோம் என பலதரப்பட்ட மக்களும் ஏங்கி வருகின்றனர்.பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியே செல்ல முடியாமல் தவிகின்றனர்.தற்போது பல தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களின் வீட்டிலிருந்தபடியே தங்களின் போடோக்கள்,வீடியோக்கள் என வெளியிட்டு வரும் நிலையில்,பிக்பாஸ் பிரபலமான கணேஷ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

2008ஆம் ஆண்டு வெளியான அபியும் நானும் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதை தொடர்ந்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு,உன்னைப்போல் ஒருவன்,இவன் வேற மாதிரி,சந்திரா,தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.பின் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.அவர் முதலில் தமிழ் சினிமாவில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பலராலும் அறியப்படும் நடிகராக மாறினார்.

ganesh venkatram is ready with josh

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனாலும் சொல்லும் அளவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் அமைய வில்லை.கணேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.அவரும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.அதன் பின்னர் அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.தற்போது வீட்டில் தன் குடும்பத்துடன் இருக்கும் இவர் இன்ஸ்டாகிரமிலும் ஆக்டிவாக இருப்பார்.சமீபத்தில் தன் குழந்தையுடன் ஆடும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார்.

ganesh venkatram is ready with josh

தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் லாக்டவுன் முடிந்து முதல் நாள் வேலைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக கணேஷ் அவர்களே எடிட் செய்துள்ளனர்.அது ஒரு பேன் மேட் வீடியோவாகும்.அதை எடிட் செய்ததற்கு நன்றியும் கணேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்,இந்த நாளிற்காக நானும் காத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ganesh venkatram is ready with josh

கோட் சூட் அணிந்து ஜாலியாக கிளம்புவது கணேஷ் ராமிக்கு மிகவும் பிடிக்கும் போலே . அவர் மனதில் இருக்கும் விஷங்களை அழகாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். எல்லோருக்கும் இந்த லாக் டவுன் முடிய வேண்டும் ரெகுலராக வாழ்கைக திரும்ப வேண்டும் என்பது தான் ஆசை. பொறுத்து இருந்து பொறுமையாக சாதிப்போம்

Recommended Video

ஒரே கூத்தா போச்சு Challenge Accepted • Harathi, NidhiAgerwal, Simbran, SameeraReddy, David Warner

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X