மகளுக்கு பெயர் வச்சாச்சு, புகைப்படம் வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராம்

By Siva

சென்னை: கணேஷ் வெங்கட்ராம் தன் செல்ல மகளுக்கு பெயர் வைத்து புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பார்வையாளர்களால் ஜென்டில்மேன் என்று பாராட்டப்பட்டவர் கணேஷ் வெங்கட்ராம். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

கர்ப்பமாக இருந்த அவரின் மனைவி நிஷா கடந்த மாதம் 29ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை தன் விரலை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் வந்துவிட்டதை அறிவித்தார் கணேஷ் வெங்கட்ராம்.

சிவகுமார்

சுஜா வருணியும், அவரின் கணவர் சிவகுமாரும் கணேஷ் வெங்கட்ராமின் மகளை பார்க்கச் சென்றபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டனர். அதில் கணேஷின் கையில் குழந்தை இருந்தாலும் முகம் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் குழந்தையை வாழ்த்தினார்கள் ரசிகர்கள்.

சமைரா

கணேஷ் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் மகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது தவிர சமைரா என்றால் என்ன அர்த்தம் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அழகு மகளுக்கு அழகான பெயரை தான் தேர்வு செய்துள்ளார் கணேஷ்.

ரோஹித் சர்மா

கணேஷின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சமைரா குட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மகளின் பெயரும் சமைரா தான் என்று தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்

கணேஷ் வெங்கட்ராம் மகளுக்கு வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நல்ல பெயர் சமைரா. நீங்களும், நிஷாவும் நிச்சயம் சமைராவை உங்களை போன்றே நல்லவராக வளர்ப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X