வித விதமா இச் இச்... ஸ்வீட் கிஸ்களுக்காக காத்திருக்கும் கணேஷ்
சென்னை : ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அதற்கு பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
தமிழில் உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன், நாயகி, தொடரி, அச்சாரம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் போலீஸ் வேடத்திலேயே நடித்திருப்பார். தற்போது தமிழில் உன் பார்வையில், வனங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்
விளம்பர படங்கள் பலவற்றில் நடித்துள்ள கணேஷ், விஜய் டிவி.,யில் அச்சம் தவிர், பிக்பாஸ் தமிழ் சீசன் 1 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். பிக்பாஸில் 3 வது பரிசை பெற்று, தனது நேர்மையான நடவடிக்கையால் பலரின் மனங்களை கவர்ந்தார் கணேஷ்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
இவர் டிவி நடிகையான நிஷாவை 2015 ல் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடனான ரொமான்டிக் ஃபோட்டோக்கள், அடிக்கடி டூர் போகும் ஃபோட்டோக்கள், தனது குடும்ப நிகழ்வுகளின் ஃபோட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டர் கணேஷ்.

யூட்யூப் சேனல் துவக்கிய கணேஷ்
இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் இணைந்து கணேஷ் அண்ட் நிஷா என்ற யூட்யூப் சேனல் ஒன்றை துவக்கினார். அதில் தங்களின் வாழ்க்கை, காதல் அனுபவங்களை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

முத்தங்களின் வகைகள்
இந்நிலையில் இந்த சேனலில் காதலர்கள் தங்களின் ஜோடியுடன் பங்கேற்கும் வகையிலான கேன்டிட் காதல் என்ற நிகழ்ச்சியை துவக்கி உள்ளனர். இதில் முதல் எபிசோடாக முத்தங்களின் வகைகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கமெண்டில் குவியும் ஹார்ட்கள்
வேடிக்கையாக, பொழுது போக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் ஜோடிகள் மட்டும் கலந்து கொண்டு, கணேஷ் மற்றும் நிஷா கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டுமாம். கணேஷின் இந்த பதிவிற்கு கமெண்டில் ஹார்ட்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











