குடும்பத்தோடு கும்பிடு போடும் பிக் பாஸ் பிரபலம்...காரணத்தை நீங்களே பாருங்க !
சென்னை: பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் குடும்பத்தோடு புத்தாண்டு வணக்கம் சொல்லும் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.அழகான குடும்பம் என்று பலரும் பாராட்டவும் செய்கின்றனர்.
அபியும் நானும் என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, உன்னைப்போல் ஒருவன், இவன் வேற மாதிரி, சந்திரா, தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சொல்லும் அளவுக்கு அறிமுகம் கிடைக்காத இவர் , பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். அவர் பல படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பலராலும் கவனிக்கப்பட்டார் .
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனாலும் சொல்லும் அளவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரபலங்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் தன்னை நிரூபித்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

ஆனால் பிக் பாஸ் டைட்டில் வென்றவர்களுக்கு கூட எந்த மாற்றமும் ,வெற்றியும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.பிக் பாஸ்சில் கலந்து கொண்ட பலரும் இந்த நிகழ்ச்சியை சகட்டுமேனிக்கு குறை கூறியும் வருகின்றனர்.
பார்ப்பதற்கு போலீஸ் அதிகாரிபோல் உள்ள கணேஷுக்கும் அதே நிலைமை தான். சாதாரணமாக இருக்கும் பலருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க, இவருக்கு ஏன் கிடைக்க வில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த வருடம் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றனர் .

ஆங்கில புத்தாண்டான இன்று, குடும்பத்துடன் வணக்கம் 2021 என்று கூறி , இவர் பதிவிட்டு ள்ள புகைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது, அதற்கு காரணம் அவர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருப்பது தான்
அவர் குழந்தை ,மனைவி அனைவரும் பிங்க் நிறத்தில் உடை அணிந்து பார்ப்பதற்கு கண்ணனுக்கு குளிர்ச்சியாகவே இருக்குன்றனர். இதை பார்த்த இவரது ரசிகர்கள், இவருக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











